மூட்டு வலி, கை – கால் வலி குணமாக இந்த நான்கு பிசின் பொடியை பயன்படுத்துங்கள்!

0
377
#image_title

மூட்டு வலி, கை – கால் வலி குணமாக இந்த நான்கு பிசின் பொடியை பயன்படுத்துங்கள்!

பெரும் தொந்தரவாக உள்ள மூட்டு வலி, கை-கால் வலி, அண்மை குறைபாடு, எலும்பு சார்ந்த பாதிப்பை மருந்து இல்லாமல் குணமாக்கி கொள்ளும் இயற்கை வைத்திய குறிப்பு பற்றி தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

*பாதாம் பிசின்
*கருவேலம் பிசின்
*முருங்கை பிசின்
*இளவம் பிசின்

பிசின் பொடி தயார் செய்யும் முறை…

பாதாம், கருவேலம், முருங்கை, இளவம் ஆகிய நான்கு பிசின் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த நான்கு பிசினும் 250 கிராம் அளவு வாங்கி கொள்ளவும்.

பிசினில் மண், தூசு இருந்தால் தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வெயிலில் காயவைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடியாக்கி கொள்ளவும். இதை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

பிசின் பொடி பயன்படுத்தும் முறை…

அரை ஸ்பூன் பிசின் பொடியில் அரை ஸ்பூன் தேன் கலந்து இரவு உணவிற்கு பிறகு சாப்பிட வேண்டும்.

*பாதாம் பிசின்

உடல் சூட்டை தணிக்க கூடியது. ஆண்மை குறைபாட்டை போக்க கூடியது. எலும்பை வலுவாக்கும்.

*முருங்கை பிசின்

கால்சியம் சத்து மிகுந்த ஒன்று. அண்மை குறைபாடு, விந்து எண்ணிக்கை குறைவு, மூட்டு, எலும்பு சார்ந்த பாதிப்பு, கை, கால் வலி, மூட்டு தேய்மானம் ஆகியவற்றிக்கு சிறந்த தீர்வு.

*கருவேலம் பிசின்

பாலுணர்வை தூண்டக் கூடியது. இரத்த சரக்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.

*இளவம் பிசின்

மூல நோயை குணமாக்கும். உடல் சூட்டை தணிக்க கூடியது. உடலுக்கு குதிரை பலத்தை கொடுக்கக் கூடியது.

Previous articleஉங்க கிட்ட முட்டை இருக்கா? அப்போ ஒருமுறை கேரளா ஸ்டைலில் “முட்டை தீயல்” செய்து பாருங்கள்!
Next articleஇதை செய்து குடித்தால் 1/2 மணி நேரத்தில் சளி தொந்தரவு நீங்கும்..!