உங்கள் தலையில் உள்ள வெள்ளை முடி நிரந்தரமாக கருமையாக இந்த ஹேர் டை யூஸ் பண்ணுங்க!!

0
224
#image_title

உங்கள் தலையில் உள்ள வெள்ளை முடி நிரந்தரமாக கருமையாக இந்த ஹேர் டை யூஸ் பண்ணுங்க!!

இன்று நரைமுடி பாதிப்பால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.தலையில் உள்ள வெள்ளை நரையை எந்த ஒரு பக்க விளைவுகள் இன்றி இயற்கையான முறையில் கருமையாக்க இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கரிசாலை
2)மருதாணி
3)அஞ்சனகல் பொடி
4)காபி தூள்
5)தேயிலை தூள்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் தேயிலை தூள் மற்றும் காபி தூள் தலா ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

இந்த நீரை ஆறவிட்டு அதில் கரிசாலை 20 கிராம்,மருதாணி பொடி 20 கிராம்,அஞ்சனகல் பொடி 20 கிராம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதை ஒரு இரவு முழுவதும் ஊறவிட்டு மறுநாள் காலையில் தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும்.

ஷாம்பு,சீகைக்காய் போன்று எதையும் தலைக்கு பயன்படுத்த வேண்டாம்.மறுநாள் வேண்டுமானால் தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி குளிக்கவும்.

இந்த ஹேர் பேக்கை ஒருமுறை தலைக்கு பயன்படுத்தினால் ஒரு மாதம் வரை தலை முடி கருமையாக இருக்கும்.

Previous articleஉங்கள் பிள்ளைகள் ஆரோக்கியமாக வளர இந்த ஹெல்த் மிக்ஸ் கஞ்சி கொடுங்கள்!!
Next articleஒரே மாதத்தில் சர்க்கரை நோய் குணமாக இந்த மூலிகை பால் அருந்தி வாருங்கள்!!