கூந்தல் அடர்த்தியாக வளர இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள்!! 100% தீர்வு உண்டு!

Photo of author

By Divya

கூந்தல் அடர்த்தியாக வளர இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள்!! 100% தீர்வு உண்டு!

வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றத்தால் நம்மில் பலர் முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகிறோம். நம் தலை முடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் முடி உதிர்தல், வழுக்கை உள்ளிட்ட பாதிப்புகளை நம் இளம் வயதில் சந்திக்கும் நிலை ஏற்பட்டு விடும்.

தலைமுடி உதிரக் காரணங்கள்:-

*பொடுகு தொல்லை

*முறையற்ற தூக்கம்

*மன அழுத்தம்

*இரசாயனம் கலந்த ஷாம்புவை தலைக்கு உபயோகிப்பது

தலை முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளர வைக்கும் ஹேர் பேக் – தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*கற்றாழை – 3 துண்டு

*முருங்கை கீரை – 1 கைப்பிடி அளவு

*வெங்காயம் – 1

*செம்பருத்தி இலை – 5

*செம்பருத்தி பூ – 4

*வெந்தயம் – 2 தேக்கரண்டி

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் வரை ஊற விடவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் உரித்த சின்ன வெங்காயம் 1, செம்பருத்தி பூ 4, செம்பருத்தி இலை 5, ஒரு கைப்படி அளவு முருங்கை கீரை, 3 துண்டு கற்றாழை மற்றும் ஊற வைத்த வெந்தயம் சேர்த்து ஒரு சுத்து விடவும்.

பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து தலை முடிகளுக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்து 1 மணி நேரத்திற்கு பின் தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை தலை முழுவதும் அப்ளை செய்து 1 மணிக்கு நேரம் வரை ஊறவிட்டு எப்பொழுதும் தலை முடிகளுக்கு பயன்படுத்தும் ஷாம்புவை பயன்படுத்தி தலையை நன்கு அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தோம் என்றால் முடி வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும்.