தலையில் உள்ள வெள்ளை முடி அனைத்தும் கருமையாக மாற இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள்!

Photo of author

By Divya

தலையில் உள்ள வெள்ளை முடி அனைத்தும் கருமையாக மாற இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள்!

Divya

தலையில் உள்ள வெள்ளை முடி அனைத்தும் கருமையாக மாற இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள்!

தற்பொழுது பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரது தலையிலும் வெள்ளை முடி எளிதில் உருவாகி விடுகிறது. முடிக்கு போதிய சத்துக்கள் இல்லாத காரணத்தினால் இளம் வயதில் நரை முடி ஏற்படுகிறது. இதனால் இளம் வயதில் முதுமை தோற்றத்தை அனைவரும் எளிதில் சந்தித்து விடுகிறோம்.

இந்த இளநரையை இயற்கை முறையில் கருமையாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை கடைபிடிக்கவும்.

தேவையான பொருட்கள்:-

*காபித் தூள் – 2 தேக்கரண்டி

*நெல்லிக்காய் தூள் – 1 தேக்கரண்டி

*தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி காபித்தூள், 1 தேக்கரண்டி நெல்லிக்காய் தூள், 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் இந்த ஹேர் பேக்கை 1/2 மணி நேரத்திற்கு ஊற வைத்து பின்னர் தலை முடிகளின் வேர்காள் பகுதிகளில் தடவி 1 மணி நேரம் வரை ஊற விடவும்.

பின்னர் தண்ணீர் கொண்டு முடிகளை நன்கு சுத்தமாக அலசி கொள்ளவும். இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்து வந்தால் தலையில் உள்ள வெள்ளை முடி அனைத்தும் கருமையாக மாறிவிடும்.