உடல் தங்கம் போல் ஜொலிக்க இந்த மூலிகை பொடி.. யூஸ் பண்ணுங்க!

0
111
#image_title

உடல் தங்கம் போல் ஜொலிக்க இந்த மூலிகை பொடி.. யூஸ் பண்ணுங்க!

சருமத்தை பொலிவாக வைக்க கெமிக்கல் சோப் பயன்படுத்துவதை விட மூலிகை பொருட்களை கொண்டு பொடி செய்து பயன்படுத்துவது நல்லது.

தேவையான பொருட்கள்…

*பன்னீர் ரோஸ் இதழ்
*ஆவரம் பூ
*சந்தனம்
*கடலை மாவு

செய்முறை…

ஒரு கிண்ணம் பன்னீர் ரோஸ் இதழ் மற்றும் ஆவரம் பூ எடுத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளவும்.

பிறகு மிக்ஸி ஜாரில் இந்த இரண்டு பொருட்களை சேர்த்து நைஸ் பவுடர் போல் அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்தில் கொட்டி 3 ஸ்பூன் சந்தனப் பவுடர் மற்றும் 3 ஸ்பூன் கடலை மாவு சேர்த்து கலந்து ஒரு பாட்டிலில் கொட்டிக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை…

ஒரு கிண்ணத்தில் மூலிகை பொடி 3 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு பால் சேர்த்து கலந்து பேஸ்டாக்கி உடலில் பூசி குளித்து வந்தால் தோல் சுருக்கம் நீங்கும். உடல் பொலிவாக இருக்கும்.

தேவையான பொருட்கள்…

*பச்சை பயறு
*வெந்தயம்
*கடலை பருப்பு

செய்முறை….

மிக்ஸி ஜாரில் 1/4 கப் பச்சை பயறு, 2 ஸ்பூன் வெந்தயம் மற்றும் 1/4 கப் கடலை பருப்பு சேர்த்து நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இதை ஒரு பாட்டிலில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை…

ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் அளவு தயாரித்த பொடி மற்றும் 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கி பேஸ்டாக்கி கொள்ளவும்.

இதை உடலில் பூசி குளித்து வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.