முடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சனை ஒரே வாரத்தில் சரியாக இந்த ஒரு ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள்!!
இன்றைய காலத்தில் முடி உதிர்வு பிரச்சனையை பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் சந்தித்து வருகிறார்கள். இதற்கு காரணம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றம் ஆகும். நம் தலை முடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் முடி உதிர்தல், வழுக்கை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
தலைமுடி உதிரக் காரணங்கள்:-
*பொடுகு தொல்லை
*முறையற்ற தூக்கம்
*மன அழுத்தம்
*இரசாயனம் கலந்த ஷாம்புவை தலைக்கு உபயோகிப்பது
இதனால் இளம் வயதில் முடி உதிர்வு ஏற்பட்டு விரைவில் வயதான தோற்றத்தை பலருக்கும் அடையும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது மிகவும் அவசியம் ஆகும்.
தேவையான பொருட்கள்:-
*கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
*வெந்தயம் – 20 கிராம்
*பச்சை பயறு – 50 கிராம்
*கருஞ்சீரகம் – 20 கிராம்
*அரிசி ஊற வைத்த தண்ணீர் – 1 கப்
(அல்லது)
தயிர்
ஹேர் பேக் செய்யும் முறை…
அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
அடுத்து அதில் 20 கிராம் வெந்தயம், 50 கிராம் பச்சை பயறு சேர்த்து வறுக்கவும். தொடர்ந்து 20 கிராம் கருஞ்சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து அடுப்பை அணைக்கவும்.
பின்னர் இதை நன்கு ஆறவிடவும். அதன்பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஆறவைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பொடித்து கொள்ளவும்.
ஒரு மாவு சலிக்கும் ஜல்லடை கொண்டு இந்த ஹேர் பேக்கை சலித்து கொள்ளவும். பிறகு ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்கவும்.
அடுத்து ஒரு பவுலில் தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கில் 2 அல்லது 3 தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் அரசி ஊறவைத்த தண்ணீர் அல்லது தயிர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இந்த ஹேர் பேக்கை தலை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி அப்ளை செய்து 1 மணி நேரத்திற்கு ஊற விடவும்.
பின்னர் மைல்டான ஷாம்பு கொண்டு தலையை நன்கு அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்தில் 2 நாட்களுக்கு செய்து வந்தோம் என்றால் முடியின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அதுமட்டும் இன்றி முடி அடர் கருமை நிறத்திற்கு மாறத் தொடங்கும்.