முடி கடகடனு வளர ஒரு மாதம் மட்டும் இதை பயன்படுத்துங்கள்!! 100% தீர்வு உண்டு!!

0
207
#image_title

முடி கடகடனு வளர ஒரு மாதம் மட்டும் இதை பயன்படுத்துங்கள்!! 100% தீர்வு உண்டு!!

குழந்தைகள், பெரியவர்கள் என்று பாகுபாடு இன்றி அனைவரையும் பாதிக்க கூடியது பொடுகு. இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் பின்னாளில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

முடி உதிர்வால் ஏற்படும் பாதிப்பு:-

*தலையில் அரிப்பு

*வழுக்கை

*தோல் வியாதிகள்

*இளம் வயதில் முதுமை தோற்றம்

தலை முடி உதிர்வு ஏற்படக் காரணம்:-

*பொடுகு

*ஈறு, பேன் தொல்லை

*அதிக இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல்

*தலை முடி வறட்சி

*ஜீன் குறைபாடு

*மன அழுத்தம்

*முறையற்ற தூக்கம்

*உணவுமுறை மாற்றம்

இந்த முடி உதிர்வு பிரச்சனையை அதிக மருத்துவம் கொண்ட வேப்பிலை மற்றும் வெங்காயத்தை வைத்து 1 மாதத்தில் சரி செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*வேப்பிலை – 1 கப்

*சின்ன வெங்காயம் – 10

செய்முறை:-

வேப்பிலை மற்றும் சின்ன வெங்காயத்தை நன்கு அலசி சுத்தம் செய்ய வேண்டும். அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து கொள்ள வேண்டும்.

ஒரு பவுல் எடுத்து அரைத்த விழுதை வடிகட்டி அல்லது காட்டன் துணியில் வைத்து நன்கு பிழிந்து கொள்ள வேண்டும். வேப்பிலை,சின்ன வெங்காய சாற்றை முடியின் வேர் பகுதியில் படுமாறு தடவ வேண்டும். அரை மணி நேரத்திற்கு பிறகு ஷாம்பு பயன்படுத்தி முடியை நன்கு அலச வேண்டும்.

இந்த ரெமிடியை வாரத்திற்கு 2 முறை தலைக்கு உபயோகித்து வந்தோம் என்றால் தலையில் இருக்கும் பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகி முடி அடர்த்தியாக வளரும்.

Previous articleகுழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்!!
Next articleஉங்களுக்கு உடல் எடை கூடிக் கொண்டே போகிறதா? அப்போ இதை 1 கிளாஸ் பருகுங்கினால் 100% பலன் கிடைக்கும்!!