தேமல், மங்கு, தோல் அலர்ஜி நீங்க.. இந்த சோப்பை பயன்படுத்துங்கள்..!

Photo of author

By Divya

தேமல், மங்கு, தோல் அலர்ஜி நீங்க.. இந்த சோப்பை பயன்படுத்துங்கள்..!

நம்முடைய சருமத்தில் தேமல், மங்கு, தோல் அலர்ஜி, அரிப்பு, படர் தாமரை என்று பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்கு காரணம் சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவு பழக்கம்.

இவ்வாறு ஏற்படும் சரும பாதிப்பை முழுமையாக குணப்படுத்த நீங்கள் கற்றாழை சோப் பயன்படுத்துங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)கற்றாழை மடல்
2)காஸ்ட்டிக் சோடா
3)தேங்காய் எண்ணெய்

சோப் தயாரிக்கும் முறை….

*தேவையான அளவு கற்றாழை மடல் எடுத்து தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில் இந்த கற்றாழை ஜெல்லை போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.

*ஒரு மிக்ஸி ஜாரில் இந்த கற்றாழை ஜெல்லை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

*இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

*பிறகு ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி கிண்ணத்தில் 1 கப் காஸ்ட்டிக் சோடா சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டி கொண்டு கலந்து விடவும்.

*பிறகு அரைத்து வைத்துள்ள கற்றாழை சாறு 1 1/2 கப் அளவு சேர்த்து கலந்து விடவும்.

*அடுத்து ஆறு கப் அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலக்கி விடவும்.

*இதை அனைத்தையும் நன்கு கலந்த பிறகு ஒரு சோப் மோல்டில் ஊற்றி 8 மணி நேரத்திற்கு நிழலில் காய விட்டால் கற்றாழை சோப் தயாராகி விடும். இதை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் தோல் தொடர்பான அனைத்தும் பாதிப்புகளும் நீங்கி விடும்.