பாத்ரூம் டைல்ஸில் படிந்திருக்கும் பல வருட உப்பு மஞ்சள் கறை நொடியில் நீங்க இதை பயன்படுத்துகள்!

0
159
#image_title

பாத்ரூம் டைல்ஸில் படிந்திருக்கும் பல வருட உப்பு மஞ்சள் கறை நொடியில் நீங்க இதை பயன்படுத்துகள்!

உங்கள் பாத்ரூம் டைல்ஸில் படிந்து கிடக்கும் மஞ்சள், உப்பு கறையை அகற்ற முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா அப்போ அதிக செலவு இல்லாத ஒரு எளிய வழி கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இஇதை வைத்து கை வலிக்காமல் பாத்ரூமில் படிந்து இருக்கும் மஞ்சள் உப்பு கறையை அகற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு
2)சோடா உப்பு
3)ஷாம்பு
4)வாஷிங் லிக்விட்
5)வினிகர்
6)கல் உப்பு
7)கோல மாவு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 2 எலுமிச்சம் பழத்தின் தோலை அதில் போட்டு கொதிக்க விட்டு எடுத்துக் கொள்ளவும்.

இதை ஆறிவிட்டு எலுமிச்சம் பழ தோலை நீக்கி எலுமிச்சை சாற்றில் சேர்க்கவும். அடுத்து அதில் 1 தேக்கரண்டி சோடா உப்பு, 1 தேக்கரண்டி கல் உப்பு, 2 தேக்கரண்டி கோல மாவு, 1 பாக்கெட் ஷாம்பு, 1 தேக்கரண்டி வாஷிங் லிக்விட் மற்றும் 1 தேக்கரண்டி வினிகர் சேர்த்து ஒரு கரண்டி கொண்டு நன்கு கலந்து விடவும்.

இதை வீட்டு பாத்ரூம் டைல்ஸில் தெளித்து 20 நிமிடங்களுக்கு பின்னர் பிரஷ் கொண்டு சுத்தம் செய்தால் புது பாத்ரூம் போல் பளிச்சிடும்.