நரைமுடி இயற்கையான முறையில் நிரந்தர கருப்பாக “மஞ்சள் + எலுமிச்சை” இப்படி பயன்படுத்துங்கள்!!
முன்பெல்லாம் 40 வயதை கடந்த நபர்களுக்கு தான் வெள்ளை முடி தோன்ற ஆரம்பிக்கும்.ஆனால் இன்று பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு கூட நரைமுடி எட்டி பார்க்க ஆரம்பித்து விடுகிறது.
முடிக்கு தேவையான சத்து கிடைக்காவிட்டால் இளம் வயதில் நரை தோன்ற ஆரம்பித்து விடும்.இதனை மறைக்க கெமிக்கல் நிறைந்த டையை தலைக்கு பயன்படுத்தினால் முடி உதிர்தல் அதிகளவு ஏற்படும்.
எனவே இளநரை,முதுமையில் ஏற்படக் கூடிய நரை நிரந்தர கருமையாக வீட்டு முறையில் ஆர்கானிக் ஹேர் டை செய்து பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி
2)கருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி
3)எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
4)மருதாணி பொடி – 3 தேக்கரண்டி
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி போட்டு நன்கு கருகி வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து இரண்டு தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்க்கவும்.பின்னர் 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
கருஞ்சீரகத்தின் நிறம் தண்ணீரில் இறங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்.இந்த நீரை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி வறுத்த மஞ்சள் தூள்,மருதாணி பொடி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த ஹேர் டையை ஒரு மணி நேரத்திற்கு ஊறவிட்டு தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு தலையை அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.