தயவுசெய்து யாரும் வெளிய வராதிங்க! ரொம்ப அசால்ட்டா இருக்காதிங்க! வடிவேலு கண்ணீர் பேச்சு!
உலகளவில் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா தற்போது இந்தியாவில் அதிகளவில் பரவி வருகிறது. ஒட்டுமொத்தமாக 22,000 பேரை கொரோனா பலிவாங்கியுள்ளது. இந்தியாவில் மட்டும்
650 க்கும் மேற்பட்டோர் இந்த பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் மாநில எல்லைகள் மூடப்பட்டதோடு, தமிழக அளவில் மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. உத்தரவை மீறி வெளியே செல்பவர்களுக்கு வழக்கு மற்றும் நூதன தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேலு கண்ணீருடன் கொரோனா பாதிப்பு குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தயவுசெய்து யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் அரசு சொல்வதை கேட்டு கொஞ்ச நாட்களுக்கு வீட்டிலேயே இருங்கள் இன்றும் கண்ணீருடன் கூறியுள்ளார். மேலும் நமது வருங்கால சந்ததி பாதிக்க கூடாது என்றும், பொதுமக்கள் யாரும் பாதிக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் நெகிழ்ச்சியுடன் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார்.
வடிவேலு பேசிய காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா பாதுகாப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா துறையில் நடிகர், நடிகைகள் போன்றோர் பலர் கொரோனா பாதிப்பில் இருந்து விழிப்புணர்வாக இருக்க வேண்டுமென்று சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காதவர்கள் மீதும் உண்மைக்கு புறம்பான வதந்திகளை பரப்புவோர் மீதும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.