மக்களுக்காக 7.58 கோடியை வாரி வழங்கிய அதிசய தம்பதி! இது வெறும் தொடக்கம்தான் என்று டுவிட்..!!!

0
90

மக்களுக்காக 7.58 கோடியை வாரி வழங்கிய அதிசய தம்பதி! இது வெறும் தொடக்கம்தான் என்று டுவிட்..!!!

கொரோனாவால் பாதித்த குடும்பங்களுக்கு உதவியாக டென்னிஸ் தம்பதியான ரோஜர் பெடரர் மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து ஒரு மில்லியன் டாலரை வழங்கியுள்ளனர். இந்திய மதிப்பில் 7.58 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.

உலக நாடுகள் பெருமளவு பாதித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் பலரும் மக்களுக்கு உதவும் வகையில் பண உதவி, பொருளுதவி, மருந்து மற்றும் முகத்தில் அணியும் மாஸ்க் போன்ற அவசர உதவிகளை செய்து வருகின்றனர். உலகம் முழுக்க 22,000 பேரை கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தனது மனைவியுடன் இணைந்து பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவும் விதமாக பெருமளவு தொகையை நன்கொடையாக கொடுத்துள்ளனர். உலக அளவில் தனி நபர் யாரும் இவ்வளவு பெரிய தொகையை இதுவரை கொடுக்கவில்லை என்பதால் பலரும் இந்த தம்பதியை பாராட்டி வருகின்றனர்.

இந்த மோசமான சம்பவத்தை தனது டுவிட்டர் மூலம் ரோஜர் பெடரர் வெளிப்படுத்தியுள்ளார். இது மிகவும் மோசமான காலம், யாரும் பலரும் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இதிலிருந்து யாரும் தப்பமுடியாது என்றும், நானும் எனது மனைவி மிர்காவும் சுவிட்சர்லாந்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ இந்த நிதியை வழங்கியுள்ளோம் என்றும், இது வெறும் தொடக்கம்தான் இதன்மூலம் பலர் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய ஒருங்கிணைய வேண்டும் என்றும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

மே மாதம் நடைபெற இருந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பிரெஞ்சு போட்டி கொரோனா பாதிப்பு காரணமாக வருகிற செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் இதுவரை 8,000 பேர் கொரோனாவால் பாதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எந்த உயிரிழப்பும் அங்கு ஏற்படவில்லை என்பதே ஆறுதலான விஷயமாகும்.

author avatar
Jayachandiran