முறைகேடை படமாக்கிய செய்தியாளரை கடுமையாக தாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி!

0
84
IAS officer severely beats journalist who filmed abuse!
IAS officer severely beats journalist who filmed abuse!

முறைகேடை படமாக்கிய செய்தியாளரை கடுமையாக தாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி!

உத்திரபிரதேசத்தில் நேற்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலின் போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. கட்சி தொண்டர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும் போது முறைகேடு நடந்ததாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளது.

இதனிடையே 600க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்று இருப்பதாக அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ஆனால் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் முறைகேடு செய்த பாஜக வெற்றி பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளன. அடுத்த ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால்  உள்ளாட்சி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலின்போது பத்திரிகையாளரை ஐஏஎஸ் அதிகாரி கடுமையாகத் தாக்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உன்னோவ் மாவட்ட வளர்ச்சி அதிகாரியாக உள்ள திவ்யன்ஷு பட்டேல் தேர்தல் நடைமுறைகளில் முறைகேடு செய்ததாக கூறப்பட்டுள்ளது. இதனை பத்திரிக்கையாளர் ஒருவர் வீடியோவாக எடுத்த நிலையில் ஆத்திரமடைந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பத்திரிகையாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்ட நீதிபதி உறுதி அளித்துள்ளார்.

இதே போன்று நேற்று மனு கொடுக்கும் நேரத்தில் கூட ஒரு சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த பெண் வேட்பாளரை தடுத்து நிறுத்தி, மானபங்கபடுத்தியது கூட முதல்வரின் ஆட்கள் என்று ஒரு செய்தி கூட வெளியாகியுள்ளது.