புதிய வசதிகளுடன் வரப்போகும் “வந்தே பாரத்” சேவை!! குஷியில் ரயில் பயணிகள்!!
தமிழகத்தில் புதிதாக பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வந்தே பாரத் ரயிலில் கூடுதல் வசதிகள் கொண்டு வரப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது ஏராளமான சொகுசு வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை நாடு முழுவதும் இயக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு தேவையான வசதிகளான,
ஏசி, வைப்பை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என்று பல்வேறு வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், குளிரூட்டப்பட்ட பெட்டிகள், தொகுதிரை வசதிகள் என்று ஏராளமான வசதிகள் இடம் பெற்றுள்ளது.
இந்த ரயிலில் கட்டணம் அதிகம் என்றாலும் பயணம் செய்யும் நேரம் குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் இந்த வந்தே பாரத் ரயிலை விரும்புகின்றார்கள்.
இது பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்பதால் நாடு முழுவதும் எங்கு வந்தே பாரத் ரயில் இயக்கம் தொடங்கப்பட்டாலும் நேரடியாக சென்று துவக்கி வைத்து வருகிறார்.
இந்தியாவில் முதன் முதலாக வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இன்று மொத்தம் 24 வழித்தடங்களில் இந்த ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வந்தே பாரத் ரயிலானது முதலில் சென்னை மற்றும் மைசூருக்கு இடையில் துவங்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்பட்டது.
இந்த ரயில் சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதனைத் தொடர்ந்து இந்த வந்தே பாரத் ரயில் சேவையானது சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த சென்னை-நெல்லை ரயில் சேவை ஆகஸ்ட் 6 துவங்கப்படும் என்று கூறி இருந்த நிலையில் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இது வரை வரவில்லை.
தற்போது இந்த வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதிகள் அமைக்கப்படுவதாக தகவல்கள் எழுந்துள்ளது. எனவே, இந்த புதிய தகவல் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.