“வந்தே பாரத்” ரயிலின் கட்டணம் குறைப்பு!! ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!
தற்போது இந்தியாவின் பல்வேறு மாநில வழித்தடங்களிலும் இந்த “வந்தே பாரத்” ரயில் இயக்கம் துவங்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கட்டணம் அதிகமாக செலுத்தப்படுகிறது.
எனவே இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும் என்றும் மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.
இவ்வாறு கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இந்த “வந்தே பாரத்” ரயில்களுக்கான கட்டணம் குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் ஏ.சி. சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பு கட்டணத்தை இருபத்து ஐந்து சதவிகிதமாக குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஐம்பது சதவிகிதத்திற்கும் குறைவாக பயணம் செய்வோர்களின் ரயிலில் கட்டண சலுகையை அளிக்கவும் ரயில்வே வாரியமானது முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது முழுக்க முழுக்க பயணிகளின் நலனையும், அவர்களது கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்த ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் பயனடைவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.