4000 நோய்களுக்கு வலி நிவாரணியாக இருக்கும் வெஜ் ஆட்டுக்கால் சூப்: டேஸ்ட்டாக செய்வது எப்படி?
ஆட்டுக்கால் போல் தோற்றம் அளிக்கும் முடவாட்டுக்கால் கிழங்கில் ஏகப்பட்ட மருத்தவ குணங்கள் இருக்கின்றது.இவை உயரமான மலைப்பகுதிகளான ஏற்காடு,ஏலகிரி,கொல்லிமலை, ஊட்டி,கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் தான் அதிகம் வளரும்.இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.மூட்டு தொடர்பான பாதிப்புகளால் அவதிப்பட்டு வரும் ஆட்களுக்கு இந்த முடவாட்டுக்கால் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.இவற்றை சூப் செய்து குடித்து வந்தோம் என்றால் அனைத்து நோய்களுக்கும் டாட்டா தான்.
தேவையான பொருட்கள்:-
முடவாட்டுக்கால் – 1 கிழங்கு
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
தக்காளி – 3
இஞ்சி – 2 சிறிய துண்டுகள்
பூண்டு – 10 பற்கள்
சின்ன வெங்காயம் – 6
செய்முறை:-
முதலில் முடவாட்டுக்கால் கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை மிஸ்சி ஜாரில் போட்டு நன்கு அரைக்க வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் பட்டை -1 ,பிரியாணி இலை-1,ஏலக்காய்-1 மற்றும் இலவங்கம் -2 என்ற அளவில் போட்டு அரைத்து வைத்துள்ள விழுதுகளை சேர்த்து ஒரு கரண்டி கொண்டு 2 நிமிடங்கள் வரை நன்கு வதக்க வேண்டும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் 1 ஸ்பூன் மஞ்சள் மற்றும் தேவைக்கேற்ப கல் உப்பு உள்ளிட்டவற்றை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் மல்லி இலைகளை தூவி இறக்கி விட வேண்டும்.
மேலும் ஆட்டுக்கால் சூப்பின் சுவையை இந்த முடவாட்டுக்கால் கொடுக்கும்.இவற்றை அடிக்கடி தயார் செய்து குடித்து வந்தோம் என்றால் மூட்டு வலி,காய்ச்சல்,செரிமான உபாதைகள்,சர்க்கரை வியாதி,உடல் பருமன்,வாயுப் பிடிப்பு,மலசிக்கல்,மனச்சோர்வு,பித்தம்,கபம்,முடக்கு வாதம்,சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நோய் பாதிப்புகளுக்கு தீர்வாக இந்த முடவாட்டுக்கால் கிழங்கு இருக்கின்றது.