விஜய் மற்றும் அஜித்தை வைத்து மாறி மாறி வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர்கள்! எஸ்.ஜே சூர்யா முதல் வெங்கட் பிரபு வரை!!

0
265
#image_title

விஜய் மற்றும் அஜித்தை வைத்து மாறி மாறி வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர்கள்! எஸ்.ஜே சூர்யா முதல் வெங்கட் பிரபு வரை!!

நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இரண்டு பேரையும் வைத்து மாறி மாறி வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தற்பொழுது முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவரும் மாறி மாறி ஒரே இயக்குநர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் இருவரையும் வைத்து திரைப்படங்களை இயக்கி வெற்றி கொடுத்த இயக்குநர்களை பற்றி பார்க்கலாம்.

எஸ்.ஜே சூர்யா…

தற்பொழுது நடிகராக அறியப்படும் எஸ்.ஜே சூர்யா அவர்கள் திரைப்பயணத்தை இயக்குநராக தொடங்கினார். அந்த வகையில் நடிகர் எஸ்.ஜே சூர்யா அவர்கள் நடிகர் அஜித் அவர்களை வைத்து வாலி திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடங்களில் நடித்தார். இந்த திரைப்படம் நடிகர் அஜித் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. இதையடுத்து நடிகர் விஜய் அவர்கள் அடுத்த வருடமே எஸ்.ஜே சூரியா இயக்கத்தில் கூஷி திரைப்படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.

இயக்குநர் பேரரசு…

இயக்குநர் பேரரசு இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவரும் நடித்த திருப்பாச்சி திரைப்படம் 2006ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் நடிகர் விஜய் அவர்களுக்கு ஹிட் திரைப்படமாக அமைய நடிகர் அஜித் அவர்களும் இயக்குநர் பேரரசு இயக்கத்தில் அடுத்த வருடமே திருப்பதி என்ற திரைப்படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.

இயக்குநர் ஏ.எல் விஜய்…

இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் நடிகை திரிஷா இருவரும் இணைந்து நடித்த கிரீடம் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் ஹிட் கொடுக்க அடுத்து 2013ம் ஆண்டில் இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் தலைவா திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நடிகர் விஜய் அவர்களுக்கு ஹிட் கொடுத்தது.

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்…

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளிவந்த தீனா திரைப்படம் காதல் மன்னனாக இருந்த நடிகர் அஜித் அவர்களை ஆக்சன் ஹீரோவாக மாற்றியது. அதன்பின்னர் நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என்று அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.

இயக்குநர் வெங்கட் பிரபு…

நடிகர் அஜித் அவர்கள் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா திரைப்படத்தில் நடித்தார். இது நடிகர் விஜய் அவர்களின் 50வது திரைப்படமாகும். 50வது திரைப்படமான மங்காத்தா மிகப் பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக நடிகர் அஜித்துக்கு அமைந்தது. இதையடுத்து நடிகர் விஜய் தற்பொழுது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி68 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் வெளியானால் வெற்றி பெறுமா இல்லையா என்பது பற்றி தெரியும்.

Previous articleபிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினை அடித்ததை பற்றி பிரதீப் கூறிய உண்மை!
Next articleஅமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் பாஜக அணிகள் போல செயல்படுகிறது! காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பதிவு!!