லியோ படத்தை பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை கிளம்பி வந்த விஜய் ரசிகை!!!

0
137
#image_title

லியோ படத்தை பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை கிளம்பி வந்த விஜய் ரசிகை!!!

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலக அளவில் இன்று(அக்டோபர்19) வெளியாகியுள்ள நிலையில் லியோ திரைப்படத்தை பார்க்க ஜப்பான் நாட்டில் இருந்து நடிகர் விஜய் ரசிகை ஒருவர் சென்னை வந்துள்ளார்.

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் இன்று(அக்டோபர்19) மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கின்றது.

லியோ திரைப்படத்தில் பல டுவிஸ்ட்டுகள் இருப்பதாகவும் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே லியோ திரைப்படம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை பார்ப்பதற்காகவே ஜப்பான் நாட்டில் இருந்து விஜய் ரசிகை ஒருவர் சென்னை வந்துள்ளார்.

லியோ திரைப்படம் பார்க்க வந்த ஜப்பான் நாட்டு விஜய் ரசிகை சென்னையில் குரோம் பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு வருகை தந்தார். ஆனால் ஜப்பான் நாட்டு விஜய் ரசிகை வருவதற்குள் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதையடுத்து வெற்றி திரையரங்கில் லியோ திரைப்படத்தின் அடுத்த காட்சியை காண்பதற்காக காத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது ஜப்பான் நாட்டு விஜய் ரசிகை உற்சாக மிகுதியால் காணப்பட்டார். இதையடுத்து நிருபர்களிடம் பேசிய அவர் “நான் நடிகர் விஜய் அவர்களின் தீவிர ரசிகை. லியோ திரைப்படத்தை பார்ப்பதற்காகவே நான் ஜப்பான் நாட்டில் இருந்து இங்கு வந்துள்ளேன்.

நடிகர் விஜய் அவர்களின் திரைப்படம் வெளியாகும் நாளில் நடிகர் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம், உற்சாகம் எனக்கு மிகவும் பிடிக்கும். நடிகர் விஜய் திரைப்படத்தை மட்டுமல்ல நடிகர் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டங்களை காண்பதற்கும் நான் சென்னை வந்துள்ளேன்.

லியோ திரைப்படத்தை பார்க்க நான் சென்னை வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. நான் இதற்கு முன்னர் நடிகர் விஜய் அவர்கள் நடித்த மெர்சல், பிகில், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை பார்த்துள்ளேன். இந்த திரைப்படங்கள் அனைத்தும் என்னை கவர்ந்தது.

மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை வந்த விஜய் ரசிகை கூறினார்.

மேலும் நிருபர்கள் அந்த ஜப்பான் நாட்டு விஜய் ரசிகர்களும் உங்களுக்கு தமிழ் தெரியுமா என்று கேட்டதற்கு ஜப்பான் நாட்டு விஜய் ரசிகை “கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்” என்று கூறினார். இதே போல பெங்களூரில் இருந்தும் நடிகர் விஜய் அவர்களின் தீவிர ரசிகை ஒருவர் லியோ படம் காண்பதற்கு சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleஎக்ஸ் தளத்தின் சேவையை நிறுத்த முடிவு!!! எலான் மஸ்க் விடுத்த அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி!!!
Next articleமைதானத்தில் அதிவேகம் காட்டாமல் சாலையில் அதிவேகம் காட்டிய ரோஹித் சர்மா!!! ஹிட்மேனுக்கு அபராதம் விதிப்பு!!!