மைதானத்தில் அதிவேகம் காட்டாமல் சாலையில் அதிவேகம் காட்டிய ரோஹித் சர்மா!!! ஹிட்மேனுக்கு அபராதம் விதிப்பு!!!

0
50
#image_title

மைதானத்தில் அதிவேகம் காட்டாமல் சாலையில் அதிவேகம் காட்டிய ரோஹித் சர்மா!!! ஹிட்மேனுக்கு அபராதம் விதிப்பு!!!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் சாலையில் அதிவேகமாக கார் ஓட்டியுள்ளார். இதையடுத்து ஹிட்மேன் ரோஹித் சர்மா அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது.

தற்பொழுதைய இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணிக்கு ரோஹித் சர்மா அவர்கள் கேப்டனாக செயல்பட்டு வருகின்றார். இதையடுத்து கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோஹ்லி, பும்ரா, சல்மான் கில், கருதிக் பாண்டியா, கே.எல்.ராகுல் உள்பட 15 பேர் கொண்ட இந்திய அணி நடப்பாண்டு உலகக் குப்பை தொடரில் விளையாடி வருகின்றது.

உலகக் கோப்பை தொடரில் இந்திய தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியையும், இரண்டாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியையும், மூன்றாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தி தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று(அக்டோபர்19) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் இருக்கும் மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் நான்காவது லீக் சுற்றில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர் கொள்கின்றது.

கடந்த அக்டோபர் 14ம் தேதி இந்தியா அணி பாகிஸ்தானுடன் விளையாடியது. அதன் பிறகு 4 நாட்கள் கழிந்து இன்று(அக்டோபர் 19) இந்தியா தனது 4வது லீக் சுற்றில் விளையாடவுள்ளது.

இதையடுத்து இரண்டு படங்களுக்கும் இடையே நான்கு நாட்கள் இடைவெளி இருந்ததால் கேப்டன் ரோஹித் சர்மா சொந்த வேலை காரணமாக மும்பை சென்றுள்ளார். இதையடுத்து இன்று(அக்டோபர்19) உலகக் குப்பை லீக் சுற்று இருப்பதால் ரோஹித் சர்மா அவர்கள் நேற்று(அக்டோபர்18) அணியுடன் இணைவதற்கு மும்பையில் இருந்து சொகுசு கார் மூலமாக வந்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் மும்பையில் இருந்து புனே நோக்கி மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் மின்னல் வேகத்தில் காரை ஓட்டியுள்ளார். இந்த சாலையில் ஒரு சமயத்தில் 200 கிலோ மீட்டர் வேகத்தையும் தாண்டி 215 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி சென்றுள்ளார்.

இதையடுத்து ரோஹித் சர்மா அவர்கள் ஓட்டி வந்த சரக்கு கார் போக்குவரத்து விதிமுறையை மீறியதற்கான மூன்று அபராத ரசீதுகளை பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் அதிவேகமாக ஓட்டி வந்த கார் லம்போர்கினி உருஸ் சொகுசு கார் ஆகும்.