விராட் கோலிக்கு இன்னும் இத்தனை சதங்கல்தான் உள்ளன

Photo of author

By Parthipan K

இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்திற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிதான் தற்போதைய நிலையில் உலகின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோரை பாராட்டியுள்ளார். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 11,867 ரன்கள் அடித்துள்ளார். அதில் 43 சதங்கள் அடங்கும். சச்சின் சாதனையை தொட இன்னும் ஏழு சதங்களே தேவையுள்ளது என்று கூறினார்.