இதை செய்தால் பார்வை மங்கள் மற்றும் பார்வை குறைபாடு அறவே வராது!!

Photo of author

By CineDesk

நம் உடலில் கண்கள் என்பது மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். கண்களில் ஏற்படும் பாதிப்பானது நம்மை சோர்வடைய செய்து விடும். நாம் எந்த ஒரு விசயத்தை செய்வதற்கும் கண் பார்வை இன்றியமையாததாக உள்ளது.

பார்வையின்றி எந்த ஒரு செயலையும் நம்மால் செய்யமுடியாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்களை நாம் பாதுகாப்பது இல்லை. டிவி, செல்போன், கம்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் மூழ்கி கண்களுக்கு சோர்வையும், பார்வையில் குறைப்பாட்டையும் ஏற்படுத்துகிறோம்.

கண்பார்வை மங்குதல், கண் புரை, கண் உலர்தல், கண்களில் சதை வளர்தல், சர்க்கரை நோயால் வரும் பார்வை குறைபாடு, கண்களில் ஏற்படும் ஒவ்வாமை இவையெல்லாம் கண்களில் ஏற்படும் நோய்கள். இந்த அனைத்து நோய்களும் நீங்க எளிய சித்த வைத்திய முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சை நெல்லிச்சாறு

பொன்னாங்கண்ணி சாறு

கற்றாழை சாறு

சிறுகீரை சாறு

பசும்பால்

செவ்விளநீர்

இவை அனைத்தையும் தலா 300 மி.லி. எடுத்துக் கொள்ளவும்.

அதிமதுரம்

கோஷ்டம்,

ஏலக்காய்

கஸ்தூரி மஞ்சள்

சாதிக்காய்,

சாதிப்பத்திரி

சுக்கு

மிளகு

திப்பிலி

கடுக்காய்

தான்றிக்காய்

லவங்கப்பட்டை

லவங்கப்பத்திரி

சோம்பு

வால்மிளகு

இவை அனைத்தையும் தலா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். பிறகு அனைத்தையும் பொடி செய்து, பசும்பால், செவ்விளநீர் விட்டு அரைத்து கொள்ளவும்.

இரண்டு லிட்டர் நல்லெண்ணெயில் மேலே சொன்ன சாறுகளையும், அரைத்த விழுதையும் சேர்த்து, அடுப்பில் மிதமான தீயில் வைத்து, தைல பதத்திற்கு வந்தவுடன் இறக்கி விடவும்.

இந்த தைலத்தை தினசரி தேய்த்து வர கண் சம்பந்தப்பட்ட நோய்கள் மட்டுமின்றி தலை முடி கொட்டுதல், இளநரை போன்றவை மறையும். மேலும் வெட்டைச்சூடு, கை, கால் எரிச்சல், உடல் எரிச்சல், மற்றும் பித்தத் தினால் ஏற்படும் தலைவலி என அனைத்தும் நீங்கும்.