கருப்பான முகம் பொலிவாக வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை அவசியம் பயன்படுத்துங்கள்..!!

Photo of author

By Divya

கருப்பான முகம் பொலிவாக வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை அவசியம் பயன்படுத்துங்கள்..!!

Divya

கருப்பான முகம் பொலிவாக வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை அவசியம் பயன்படுத்துங்கள்..!!

நம்மில் பலரது முகம் கருப்பாகவும், பொலிவிழந்தும் காணப்படுகிறது. இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம்.

இந்நிலையில் இயற்கையான பொருட்களை வைத்து பொலிவிழந்த முகத்தை அதிக பொலிவாக மற்ற இந்த வழியை பாலோ செய்யுங்கள் போதும்.

தேவையான பொருட்கள்:-

*பச்சை பயறு

*தக்காளி

*மஞ்சள்

*ரோஸ் வாட்டர்

செய்முறை:-

முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் பச்சை பயறு 4 தேக்கரண்டி அளவு சேர்த்து ஒரு சுத்து விடவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளவும். இதை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ளவும்.

அடுத்து 1/2 தக்காளி பழம் எடுத்து அதே மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். இதை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பச்சை பயறு கலவையில் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

பிறகு 1/4 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இதை முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு நன்கு சுத்தம் செய்யவும். இதை தொடர்ந்து பின்பற்றி வந்தோம் என்றால் கருமை நிறத்தில் பொலிவற்று இருந்த முகம் ஒரே வாரத்தில் அழகாகவும், பொலிவாகவும் காணத் தொடங்கும்.