முகம் பளபளப்பாக வேண்டுமா? உடனடியாக இந்த பேசியலை ட்ரை செய்து பாருங்கள்!
இன்று நம் பதிவில் பார்ப்பது பாதாம் பேஸ் பேக் எப்படி செய்வது என்பது தான். அதற்கு தேவையான பொருட்கள் என்றால் பாதாம் மற்றும் பாலாடை தான். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் ,முகப்பரு ,முகச்சுருக்கம் போன்றவை நீங்கும். முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற வேண்டும் என்றால் அதற்கு இந்த பேஸ் பேக் முற்றிலும் உதவியாக இருக்கும்.
பாதாமை முதல் நாள் இரவே நன்கு ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு பசும்பாலில் வரும் பாலாடையை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஊற வைத்துள்ள பாதாமை தோல் நீக்கி விட வேண்டும். தோல் நீக்கிய பாதாமுடன் பாலாடையை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தண்ணீர் சேர்க்காமல் சிறிதளவு பால் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு முகத்தை நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். அதனையடுத்து நாம் அரைத்து வைத்துள்ள பாதாம் கலவையை முகத்தில் நன்கு அப்ளை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு 10 அல்லது20 நிமிடங்கள் நன்கு ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை கழுவிக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளி, கருவளையம், முகசுருக்கம், முகப்பரு ,இறந்த செல்கள் போன்றவைகள் நீங்கி முகம் பளபளப்பாகும்.