நிம்மதியான உறக்கம் வேண்டுமா? அப்போ “ஆட்டுக்கால் சூப்” அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்!!

0
91
#image_title

நிம்மதியான உறக்கம் வேண்டுமா? அப்போ “ஆட்டுக்கால் சூப்” அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்!!

நவீன காலத்தில் நிற்க நேரமின்றி அனைவரும் இயந்திரம் போல் வேலை பார்த்து வருகிறோம்.இதனால் மன அழுத்தம் அதிகளவில் ஏற்பட்டு நிம்மதியற்ற தூக்கத்தை நாம் தூங்குகிறோம்.இப்படி இருந்தால் நம் உடல் விரைவில் எளிதில் பல பாதிப்புகளுக்கு ஆளாகி விடும்.ஒரு மனிதனுக்கு 8 மணி நேர தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

ஆட்டுக்கால் சூப்பில் கிளைசின் எனும் அமினோ அமிலம் இருக்கிறது.இவை தசைகளின் தளர்வுக்கு பெரிதும் உதவுகிறது.இதனால் உடலுக்கு நல்ல ஓய்வு மற்றும் நல்ல நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

*ஆட்டுக்கால் – 4

*கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி

*சீரகத் தூள் – 2 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*மிளகு தூள் – 2 தேக்கரண்டி

*பூண்டு – 10 பற்கள்

*இஞ்சி – சிறுதுண்டு

*பச்சை மிளாகாய் – 1

*நல்லெண்ணெய் – தேவையான அளவு

*சின்ன வெங்காயம் – 10

*தக்காளி – 1

*கடுகு – 1 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*கொத்தமல்லி தழை – சிறிதளவு

*கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:-

முதலில் ஆட்டுக்கால்களின் மேல் இருக்கும் முடிகளை நீக்கிவிட்டு அதை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் நறுக்கி வைத்துள்ள ஆட்டுக்கால்,சின்ன வெங்காயம், நறுக்கி வைத்துள்ள தக்காளி,பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொள்ளவும்.அதன் பின் இஞ்சி, பூண்டு தோல் நீக்கி சுத்தம் செய்து இரண்டையும் இடித்து சேர்க்கவும்.

பின்னர் 2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்,1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்,2 தேக்கரண்டி மிளகுத்தூள் மற்றும் 2 தேக்கரண்டி சீரகத்தூள் சேர்க்கவும்.பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.அதன் பின் குக்கரை மூடி 4 முதல் 5 விசில் விடவும்.பின்னர் குக்கரை இறக்கி வைக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் 1 தேக்கரண்டி கடுகு, சீரகம் சிறிதளவு,இடித்த சின்ன வெங்காயம் இரண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பின்னர் செய்து வைத்துள்ள ஆட்டுக்கால் சூப்பை அதில் சேர்க்கவும்.இறுதியாக கொத்தமல்லி தழை சிறிதளவு சேர்த்து இறக்கவும்.

Previous articleகழுத்து கருமை நீங்க என்ன செய்வதென்று தெரியவில்லையா? இதை ட்ரை பண்ணுங்க போதும்!!
Next articleமஞ்சள் காமாலையை குணப்படுத்தும் பாகற்காய்!!! இதை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும்!!?