கரு கரு முடி வேண்டுமா? கறிவேப்பிலை பொடி செய்து பயன்படுத்துங்கள்!
கூந்தல் கருமையாக இருப்பது தனி அழகு… ஆனால் நவீன கால வாழக்கையில் கூந்தல் பராமரிப்பு என்பது பெண்களிடம் குறைந்து விட்டது.
இதனால் கூந்தல் வெடிப்பு, வறட்சி, வெள்ளை முடி, முடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. கூந்தல் கரு கருன்னு வளர கறிவேப்பிலை பொடி செய்து பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கறிவேப்பிலை – 1 கைப்பிடி
2)வெந்தயம் – 1/4 கப்
3)கருஞ்சீரகம் – 1/4 கப்
4)நெல்லிக்காய் – 1 கப்
செய்முறை….
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை தண்ணீரில் போட்டு அலசி ஒரு காட்டன் துணியில் பரப்பி நன்கு காய விடவும்.
10 முதல் 15 பெரு நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலி வைத்து அதில் 1/4 கப் வெந்தயம் மற்றும் 1/4 கப் கருஞ்சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து உலர்த்திய கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் சேர்த்து லேசாக வறுத்து எடுத்து ஆற விடவும்.
வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறியப் பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமிக்கவும். ஈரம் படாமல் பார்த்துக் கொண்டால் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை….
ஒரு கிண்ணத்தில் இந்த கறிவேப்பிலை பொடி தேவையான அளவு கொட்டி சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தலை முழுவதும் அப்ளை செய்யவும். 1 மணி நேரம் கழித்து எப்பொழுதும் போல் தலைக்கு குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தலை முடி கருமையாக வளரும்.