கட்டை முடி வேண்டுமா? அப்போ இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க!

Photo of author

By Divya

கட்டை முடி வேண்டுமா? அப்போ இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க!

தலை முடி வளர்ச்சிக்கு எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு தலையை முறையாக பராமரிக்க வேண்டும். வாரத்தில் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தவறாமல் தலைக்கு எண்ணெய் வைத்து வர வேண்டும்.

இதை செய்யத் தவறுவதால் தான் முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, இளநரை, தலை அரிப்பு ஆகியவை ஏற்படுகிறது. இந்த பாதிப்புகளை சந்திக்க கூடாது என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய் வகைகளில் தங்களுக்கு விருப்பமான எண்ணையை தயாரித்து பயன்படுத்துங்கள்.

*தேயிலை மர எண்ணெய்

தலைக்கு முடி வளர்ச்சி அதிகரிக்க டீ ட்ரீ ஆயிலை தினமும் மயிர்கால்களில் படுமாறு தடவி வந்தால் விரைவில் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைக்கும்.

தேயிலை மர எண்ணெய் பொடுகு, தலை அரிப்பு, பேன், முடி உதிர்தல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.

*கற்றாழை எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் சிறிது கற்றாழை துண்டுகளை போட்டு காய்ச்சி ஆறவிட்டு முடிகளுக்கு பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும்.

*கருவேப்பிலை எண்ணெய்

கருவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி ஆறவிட்டு கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால் கருமையான முடி வளர்ச்சி இருக்கும்.

*வேப்பிலை + தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் சிறிது வேப்பிலை பொடி சேர்த்து கலந்து தலை முடிகளுக்கு பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.