குண்டாக இருக்கும் உடலை குச்சி போல மாற்ற வேண்டுமா!!? அப்போ இதை தயார் செஞ்சு குடிச்சு பாருங்க!!!
குண்டாக இருக்கும் உடலை குச்சி உடம்பாக மாற்றுவதற்கு கேழ்வரகை பயன்படுத்தி கஞ்சி தயாரித்து குடிக்க வேண்டும். இந்த கஞ்சியை தயார் செய்ய தேவையான பொருட்கள், எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
உடல் எடை அதிகமாகவும் குண்டாகவும் இருக்கும் நபர்கள் உடல் எடையை குறைப்பதற்கு பலவிதமான சிகிச்சைகளை எடுப்பார்கள். மாத்திரைகள், மருந்துகள், சிகிச்சை முறை, உடற்பயிற்சி செய்வது என்று பல வழிமுறைகளை பின்பற்றுவார்கள். ஆனால் எதுவும் பலன் இல்லாமல் போயிருக்கும்.

அதாவது முன்பு உடல் எடை குறைவது போல குறையும். பின்னர் உடல் எடை குறைந்து விட்டது என்று உடல் எடையை குறைக்க பின்பற்றும் வழிமுறைகளை நிறுத்தி விட்டால் மீண்டும் உடல் எடை அதிகரிக்கும். இந்த உடல் எடையை குறைப்பதற்கு கேழ்வரகு மிகவும் உதவியாக இருக்கும்.
கேழ்வரகில் கஞ்சி தயார் செய்து குடித்து வந்தால் உடல் எடை குறையத் தொடங்கும். இந்த கேழ்வரகு கஞ்சியை தயார் செய்ய என்ன தேவை, எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
கேழ்வரகு கஞ்சி தாயார் செய்ய தேவையான பொருட்கள்…
* கேழ்வரகு அரிசி – 50 கிராம்
* பாசிப்பருப்பு – 25 கிராம்
* வெந்தயம் – கால் டீஸ்பூன்
* சீரகம் – கால் டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் – ஒரு கப்
* பட்டை – ஒரு துண்டு
* பிரிஞ்சு இலை – 1
* பூண்டு – 4 பல்
* நெய் – தேவையான அளவு
* மிளகுத்தூள் – தேவையான அளவு
* கொத்துமல்லி தழை – தேவையான அளவு
கேழ்வரகு கஞ்சி தயார் செய்யும் முறை…
அடுப்பை பற்ற வைத்து வாணலி வைத்துக் கொள்ளவும். பிறகு இதில் கேழ்வரகு அரசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் வறுத்து வைத்துள்ள கேழ்வரகு அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மீண்டும் அடுப்பில் வாணலியை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் வெந்தயம் மற்றும் சீரகம் சேர்த்து வறுத்து பின்னர் இதில் பிரிஞ்சு இலை, பட்டை, சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
அதன் பின்னர் இதில் கேழ்வரகு அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மூடி வைக்க வேண்டும்.
சிறிது நேரம் கழிந்து திறந்து பார்த்து கேழ்வரகு அரிசி வெந்த பிறகு இந்த கஞ்சியில் மிளகுத்தூள் தூள் சிறிதளவும் கொத்துமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது உடல் எடையை குறைக்கக் கூடிய கேழ்வரகு கஞ்சி தயார்.
கேழ்வரகை இதுபோல கஞ்சியாக தயார் செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு அனைத்தும் கரையும். மேலும் கெட்ட நீர் வெளியேறிவிடும். இதை நீங்கள் பின்பற்றும் டயட் முறையிலும் உணவாக சேர்த்துக் கொள்ளலாம். மேலும் கேழ்வரகு கஞ்சி சாப்பிட்டால் அதிக நேரம் பசியை தாங்கும். உடல் எடையை குறைக்கவும் இந்த கஞ்சி பயன்படுகின்றது.