முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? கொய்யா பழத்தை இப்படி பயன்படுத்துங்க!!

0
141
#image_title

முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? கொய்யா பழத்தை இப்படி பயன்படுத்துங்க!!

நம்மில் சிலருக்கு முகத்தில் கருமை, கருவளையங்கள், கழுத்தைச் சுற்றி கருமை நிறம் இருக்கும். இவை அனைத்தையும் எவ்வாறு மறையச் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நாம் அனைவரும் நம்முடைய முகத்தின் அழகை பராமரிக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்போம். ஆண்களும் தங்கள் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதைவிட அதாவது ஆண்களை விட பெண்கள் தங்களின் முகத்தின் அழகை பராமரிப்பதில் அதிக அக்கறை கொண்டவர்கள்.

இதற்காக பெரும் பணத்தை செலவு செய்வது உண்டு. பார்லர், மேக்கப் சாதனங்கள், சிகிச்சைகள் என பலவிதங்களில் முகத்தை பராமரித்து அழகாக வைத்துக் கொள்வார்கள். அந்த வகையில் இதெல்லாம் செய்வது முகத்தில் உள்ள கருமை மறைந்து முகம் பொலிவு பெற வேண்டும் என்பது தான். அவ்வாறு நினைக்கும் பெண்களுக்கு இந்த பதிவின் மூலமாக முகத்தில் உள்ள கருமை மட்டுமில்லாமல் கழுத்தை சுற்றி ஏற்படும் கருமையை எவ்வாறு மறைய வைப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

முகத்தில் உள்ள கருமையை போக்க நாம் கொய்யா பழம் பயன்படுத்தலாம். கொய்யாப் பழத்தை நாம் சாப்பிடும் பொழுது பற்கள், ஈறுகள் பலம் பெறுகின்றது. மேலும் இதில் உள்ள கால்சியம் சத்து நம்முடைய எலும்புகளுக்கும் பலத்தை அளிக்கும். மேலும் பல நன்மைகளை தரும் கொய்யாப் பழத்தை நாம் சருமத்திற்கும் பயன்படுத்தலாம்.

இந்த கொய்யாப் பழத்தை மட்டும் சருமத்திற்கு பயன்படுத்தக் கூடாது. இதனுடன் மற்றொரு பொருள் சேர்த்து பின்னர் பயன்படுத்த வேண்டும். அந்த மற்றொரு பொருள் என்ன எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்…

* கொய்யாப்பழம்
* கேரட்

செய்முறை…

முதலில் கொய்யாப்பழம் மற்றும் கேரட் இரண்டையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதை மிக்சி ஜாகிர் போட்டுக் கொள்ளவும். பின்னர் இதை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளை வேண்டும். இதோ கருமையை பறக்கும் மருந்து தயார்.

இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும். 30 நிமிடங்கள் இதை ஊற வைக்க வேண்டும். 30 நிமிடங்கள் நன்கு ஊறிய பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி விடவும். பின்னர் வறட்சி ஏற்படாமல்தடுக்க மாய்சுரைசர் எதையாவது ஒன்றை பயன்படுத்தலாம்.

Previous articleசாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!
Next articleகருமையான உதடுகள் சிவப்பாக மாற வேண்டுமா! அப்போ இப்படி பண்ணுங்க!!