தோல் அரிப்பு குணமாக வேண்டுமா? தேங்காய் எண்ணெயுடன் இதனை கலந்து தேய்த்தால் போதும்!

0
290

தோல் அரிப்பு குணமாக வேண்டுமா? தேங்காய் எண்ணெயுடன் இதனை கலந்து தேய்த்தால் போதும்!

அரை மணி நேரத்தில் தோல் அரிப்பு நீங்க எவ்வித செலவுமின்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும்.

உடலில் அரிப்பு உண்டாவதற்கான காரணம் வறண்ட சருமம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளின் ஒவ்வாமை சுற்றுப்புற சூழலில் ஏற்படும் மாசுகளை காரணமாகவும் தோல் அரிப்பு ஏற்படும்.

உடலில் உள்ள தேவையற்ற மாசுக்கள் தோல் பகுதியில் தங்கிடுவதன் காரணமாக தோல் அரிப்பு ஏற்படுகிறது. இதனை எவ்வாறு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.

தோல் அரிப்பினை சரி செய்து கொள்ள வீட்டில் உள்ள பொருட்களான மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை வெதுவெதுப்பாக சிறிது நேரம் காய்ச்சி அதனை தோல் அரிப்பு உள்ள இடத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மூன்று அல்லது நான்கு நாள் தொடர்ந்து செய்து வருவதன் காரணமாக தோலில் உள்ள கெட்ட பாக்டீரியா அழிந்து அரிப்பு ஏற்படாத வண்ணம் தோளினை பாதுகாத்துக் கொள்கிறது.இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிய கட்டி கற்பூரம் ஆகியவற்றை நன்றாக வெப்பப்படுத்தி அதன் பிறகு தோல் அரிப்பு உள்ள இடத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு செய்வதன் காரணமாகவும் தோல் அரிப்பு முற்றிலும் குணமடைந்து விடும்.

அதுமட்டுமின்றி 20 கிராம் வினிகர் மற்றும் 20 கிராம் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு எப்போதெல்லாம் தோல் அரிப்பு ஏற்படுகிறதோ அவ்விடத்தில் இதனை தேய்த்து வருவதன் காரணமாகவும் மிக விரைவாக தோல் அரிப்பு குணமாகும்.

Previous articleதுலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதிர்பார்த்த வேலைகள் சாதகமாக நடைபெறும் நாள்!!
Next articleவிருச்சகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் மூலம் செலவுகள் வந்து சேரும் நாள்!!