வயிற்றில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற வேண்டுமா! பூசணிக்காய் விதைகளை இப்படி பயன்படுத்துங்க!!

0
85
#image_title

வயிற்றில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற வேண்டுமா! பூசணிக்காய் விதைகளை இப்படி பயன்படுத்துங்க!!

நமது வயிற்றில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் நாடாப்புழுக்களை பூசாணிக்காயின் விதைகளை வைத்து எவ்வாறு அழித்து வெளியேற்றுவது என்பது குறித்து பார்க்கலாம்.

பூசணிக்காயின் ஒவ்வொரு பகுதியும் மருந்துதான். சதை, விதை, தோல் எல்லாமே மருந்தாகப் தான். பயன்படுகின்றது. இதன் சதைகளை அரைத்து அந்த விழுதை தீக்காயம், சுடுநீர் பட்ட காயம் மேல் வைத்து வந்தால் புண்கள் ஆறிவிடும்.

தேவையான பொருட்கள்…

* பூசணிக்காய் விதைகள்
* சர்க்கரை
* விளக்கெண்ணெய்

செய்முறை மற்றும் பயன்படுத்தும் முறை…

இந்த பூசணிக்காய் விதைகளை பொடியாக்கி நீரில் குளைத்து விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் விஷம் உடனடியாக இறங்கும். பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். இந்த பூசணிக்காய் விதைகளை வைத்து நாம் எப்படி நாடாப்புழுக்களை வயிற்றில் இருந்து நீக்குவது என்பது குறித்து பார்க்கலாம்.

அதற்கு முதலில் நாம் பூசணிக்காயின் விதைகளை உலர்த்தி பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பூசணிக்காய் விதைப் பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு இதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் சர்க்கரை கலந்த இந்த பூசணிக்காய் விதைப் பொடியை நாம் இரவில் தின்றுவிட வேண்டும். மறுநாள் காலையில் அரை தேக்கரண்டி விளக்கெண்ணெய் குடித்தால் வயிற்றில் உள்ள அனைத்து நாடப்புழுக்களும் வெளியே வந்துவிடும்.

Previous articleபொடுகுத் தொல்லையை ஒழிக்க வேண்டுமா! இந்த 3 வழிமுறைகளை பயன்படுத்துங்க!!
Next articleமக்களே உஷார்.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!!