பற்களில் உள்ள மஞ்சள் படலம் ஒரே நாளில் நீங்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

பற்களில் உள்ள மஞ்சள் படலம் ஒரே நாளில் நீங்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!!

நம் முன்னோர்கள் வேப்பங்குச்சி உள்ளிட்ட இயற்கை பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்து வந்ததால் அவர்களுக்கு இது போன்ற மஞ்சள் பற்கள், ஈறுகளில் ரத்தம் கசிதல், பல் சொத்தை ஆகுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வில்லை. தற்பொழுது இந்த முறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை.

வெள்ளை பற்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறக் காரணம்:-

*உணவு முறை மாற்றம்

*புகை பிடித்தல்

*மது அருந்துதல்

*டீ, காபி அதிகம் பருகுதல்

*சரியாக பல் துலக்காதது

மஞ்சள் பற்களை வெண்மையாக்க வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*சால்ட்

*மஞ்சள் தூள்

*சுத்தமான தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து கொள்ளவும்.அதில் சமயலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி சேர்க்கவும்.

பின்னர் அதில் சால்ட் 1/2 தேக்கரண்டி மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து கலக்கி கொள்ளவும். இதை பல் துலக்கும் பிரஸ் மேல் தடவி பற்களை நன்றாக துலக்கவும்.

காலை, இரவு 2 நேரங்களிலும் இந்த முறையை பாலோ செய்வது மிகவும் முக்கியம். இப்படி தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறைகள் நீங்கி அவை பளிச்சிடும். அதேபோல் எந்த உணவு உண்டாலும் பிறகு தண்ணீரை கொண்டு வாயை நன்கு கொப்பளிப்பது அவசியம்.

மேலும் மஞ்சள் பற்களை சரி செய்ய தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெய் கொண்டு வாயை நன்கு சுத்தம் செய்யலாம். வாழைப்பழத்தோல் கொண்டு பற்களை நன்கு தேய்த்து சுத்தம் செய்யலாம். அது மட்டுமில்லாமல் வெந்தயம் பயன்படுத்தி அசிங்கமான மஞ்சள் பற்களை வெள்ளையாக மாற்றலாம்.