செரிமான சக்தியை அதிகரிக்க வேண்டுமா! இலந்தை பழத்தை இப்படி சாப்பிடுங்க!!

Photo of author

By Sakthi

செரிமான சக்தியை அதிகரிக்க வேண்டுமா! இலந்தை பழத்தை இப்படி சாப்பிடுங்க!!

நம்முடைய செரிமான சக்தியை அதிகரித்து எளிமையாக செரிமானம் நடக்க கலந்து பழத்தை சாப்பிட்டு வந்தால் போதும். இந்த இலந்தை பழத்தை செரிமானம் இயல்பாக நக்க எவ்வாறு சாப்பிடுவது என்பது குறித்து பார்க்கலாம்.

இலந்தை பழத்தை நாம் சாப்பிடும் பொழுது நம்முடைய உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த இலந்தை பழத்தை சாப்பிடும் பொழுது வாந்தி, தலைச்சுற்றல் ஏற்படாது. இலந்தை பழத்தை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது முகத்தில் சுருக்கங்கள் ஏற்படாது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மேலும் எலும்பு வலிமை பெறும்.

இந்த இலந்தை பழம் நம்முடைய பாரம்பரிய மருத்துவத்திலும், சீன பாரம்பரிய மருத்துவத்திலும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கலந்து பழத்தை சாப்பிட்டு வரும் பொழுது நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து உடல் எடை குறையத் தொடங்கும். செரிமானம் எளாமையாக நடக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

செரிமானம் எளிமையாக நடக்க செய்ய வேண்டியது…

இதற்கு இலந்தை பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள விதையை நீக்கிவிட்டு இதில் உள்ள சதைப் பகுதியை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து உலர்த்திக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த மிளகாய் பொடி கலந்த இலந்தை பழத்தை காலை மற்றும் மாலை என்று இரண்டு வேலைகள் சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வரும் பொழுது நம்முடைய செரிமான சக்தி அதிகரிக்கும். நன்கு பசி ஏற்படும். மேலும் செரிமானம் சார்ந்த அனைத்து கோளாறுகளும் நீங்கி செரிமானம் எளிமையாக நடக்கும்.