ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த சூப் குடிங்க..
மலிவாக கிடைக்கும் முருங்கைக்கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. அது மட்டுமல்லாமல் முருங்கைக் கீரையில் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து உள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் வாரத்திற்கு 3 முறை முருங்கைக் கீரை சூப் குடித்து வந்தால் உங்களது சர்க்கரை அளவு குறையும். மேலும், முருங்கை கீரை சூப் குடித்து வந்தால் உங்கள் உடல் எடை கணிசமாக குறையும்.
சரி முருங்கைக்கீரை சூப் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் –
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை – 4
கைப்பிடிசின்ன வெங்காயம் – 4
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
பூண்டு – 4 பல்
இஞ்சி – 1 துண்டு
காய்ந்த மிளகாய் – 2
கடுகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் முருங்கைக் கீரை நன்றாக ஆய்ந்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு போட்டு அதில் சீரகம், நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்னர், அதில், இஞ்சி மற்றும் பூண்டை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர், தக்காளியை போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதில், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, முருங்கைக் கீரை போட்டு நன்றாக கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கொதித்த பின்னர், உப்பு, மிளகு தூள் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து இறக்கினால் முருங்கைக் கீரை சூப் ரெடி.