இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ பொட்டாசியம் நிறைந்த இந்த உணவுகளை சாப்பிடுங்க!

0
294
#image_title

இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ பொட்டாசியம் நிறைந்த இந்த உணவுகளை சாப்பிடுங்க!

நம்முடைய உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள நாம் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இரத்த அழுத்தம் என்பது எல்லாருடைய உடலிலும் இருக்கும். அது ஒரு எல்லைக்கு உட்பட்டு இருக்கும் வரையில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அதுவே மிகக் குறைவாகவோ அல்லது மிகவும் அதிகமாகவோ இருந்தால் தான் நம்முடைய உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படக் கூடும். எனவே நாம் நம்முடைய உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை அதிகமாக உயராமலும் மிகவும் குறையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

பொட்டாசியம் நிறைந்த சத்துக்கள் நம்முடைய உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. பொட்டாசியம் சத்துக்கள் நம்முடைய உடலுக்கு அத்தியாவசிய தாதுவாகவும் எலக்ட்ரோலைட்டாகவும் செயல்பட்டு வருவதால் நம்முடைய உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை சீராக வைக்க பொட்டாசியம் சத்துக்கள் உதவுகின்றது. பொட்டாசியம் சத்துக்கள் நம்முடைய செல்களில் ஊட்டச்சத்துக்கள் செல்வதை எளிமையாக்குகின்றது. மேலும் நம்முடைய நரம்பு மற்றும் தசை செயல்பாட்டை ஊக்குவிக்கின்றது. தற்பொழுது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவி செய்யும் உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த உணவுகள்…

* பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள்களில் சர்க்கரை வல்ல கிழங்கும் ஒன்று. இதை சீனிக் கிழங்கு என்றும் அழைப்பார்கள். இந்த சர்க்கரை வல்லிக் கிழங்கானது உடலுக்குத் தேவையான பொட்டாசியம் சத்துக்கள். நுகர்வு அதிகரிக்கின்றது. எனவே உடலில் இரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டும் என்றால் சர்க்கரை வல்லி கிழங்கு சாப்பிடலாம்.

* பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளில் அவகோடா பழமும் ஒன்று. இந்த அவகோடா பழம் நம்முடைய உடலில் 15 சதவீதம் பொட்டாசியம் சத்துக்கள் தேவையை பூர்த்தி செய்கின்றது. மேலும் இந்த அவகோடா பழத்தில் வைட்டமின் கை சத்தும் நிறைந்துள்ளது. எனவே அவகோடா பழத்தை நாம் உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள சாப்பிடலாம்.

* வெயில் காலங்களில் அதிகமாக தேவை கொண்ட தர்பூசணி பழத்தையும் நாம் இரத்த அழுத்தத்தை சீராக்க சாப்பிடலாம். வெறும் இரண்டு துண்டு தர்பூசணி பழத்தில் உடலுக்குத் தேவையான பொட்டாசியம் சத்துக்கள் 14 சதவீதம் கிடைக்கின்றது.

* நம்முடைய உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள பசலைக் கீரையை சாப்பிடலாம். ஒரு கப் பசலைக் காலையில் 12 சதவீதம் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இந்த பசலைக் கீரையில் போலேட் சத்துக்கள், மெக்னீசியம் சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் கை ஆகிய சத்துக்கள் இருக்கின்றது.

* நம்முடைய உடலில் பொட்டாசியம் சத்துக்களை அதிகரித்து இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள பீன்ஸ் விதைகளை சாப்பிடலாம். கருப்பு நிறம் கொண்ட பீன்ஸை விட வெள்ளை நிறம் கொண்ட பீன்ஸில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக இருக்கின்றது.

* உடலுக்கு குளிர்ச்சி தரும் பானமாக விளங்கும் இளநீரானது நம்முடைய உடலில் இரத்த அழுத்த சீராக வைக்க உதவும் பொட்டாசியம் சத்துக்களையும் நமக்கு தருகின்றது. ஒரு கப் இளநீர் மூலம் நம்முடைய உடலுக்கு 13 சதவீதம் பொட்டாசியம் சத்துக்கள் கிடைக்கின்றது.

* பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளில் உருளைக் கிழங்கும் ஒன்று. உடலில் பொட்டாசியம் சத்துக்களை அதிகரித்து இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உருளைக் கிழங்கை சாப்பிடலாம். உருளைக் கிழங்கு மூலமாக நம்முடைய உடலுக்கு 12 சதவீதம் பொட்டாசியம் சத்துக்கள் கிடைக்கின்றது.

 

Previous articleமார்பில் தேங்கிய சளியை நிமிடத்தில் கரைத்து தள்ளும் இந்த பானம் பற்றி தெரியுமா?
Next articleGOLD RATE: இறங்குமுகத்தை நோக்கி தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!