80 வயதில் 20 வயது இளமை வேண்டுமா? அப்போ இந்த க்ரீமை முகத்தில் தடவுங்கள்!

Photo of author

By Divya

80 வயதில் 20 வயது இளமை வேண்டுமா? அப்போ இந்த க்ரீமை முகத்தில் தடவுங்கள்!

முகம் பொலிவாகவும், இளமையாகவும் இருக்க வீட்டு முறையில் தயாரிக்கப்படும் க்ரீமை பயன்படுத்தவும். இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது… நிரந்தர தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்…

*ரோஜா இதழ்
*கற்றாழை ஜெல்
*பன்னீர்
*பீட்ரூட்
*கடலை மாவு

பேஸ் க்ரீம் தயார் செய்யும் முறை…

ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காயவைத்து கொள்ளவும். இதை அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு கைப்பிடி பன்னீர் ரோஜா இதழை சிறிது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து நிறம் மாறும் வரை கொதிக்க விடவும்.

பிறகு இந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி கொள்ளவும்.

அடுத்து ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பெரிய கிண்ணம் எடுத்து அதில் 3 ஸ்பூன் கடலை மாவு 2 ஸ்பூன் பன்னீர், கற்றாழை ஜெல் மற்றும் 3 ஸ்பூன் பீட்ரூட் பொடி சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பிறகு பன்னீர் ரோஜா தண்ணீரை ஊற்றி நன்கு குழைத்துக் கொள்ளவும். இதை ஒரு பாட்டிலில் போட்டு சேமித்து வைக்கவும்.

இந்த க்ரீமை தினமும் சருமத்திற்கு அப்ளை செய்து வந்தால் முகம் என்றும் இளமை தோற்றத்துடன் இருக்கும்.