உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைக்க வேண்டுமா!!? அப்போது இந்த உணவுகளை சாப்பிடுங்க!!!
உடல் எடை குறைத்து கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும். இதன் மூலமாக அதிக உடல் எடை உள்ளவர்கள் உடல் எடையை குறைக்கலாம். மேலும் உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கவும் இந்த உணவுகள் பயன்படுகின்றது. இந்த பதிவில் உடல் எடையை கட்டுக் கோப்பாக வைக்க உதவும் உணவு வகைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவும் உணவு வகைகள்…
குடை மிளகாய்…
உடலை கட்டுக்கோப்பாக வைக்க குடை மிளகாய் மிகவும் உதவி செய்கின்றது. இந்த குடை மிளகாயில் மிகவும் குறைந்த அளவே கலோரிகள் உள்ளது. மேலும் குடை மிளகாயில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இந்த வைட்டமின் சி சத்துக்கள் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவி செய்கின்றது.
ஆப்பிள்…
ஆப்பிள் பழத்தில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், தாதுக்கள் ஆகியவை உள்ளது. இவை நமக்கு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவி செய்கின்றது. மேலும் ஆப்பிள் பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. எனவே ஆப்பிளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக வைக்க உதவி செய்கின்றது.
முட்டைக்கோஸ்…
முட்டைக்கோஸில் வைட்டமின் சத்துக்களும் தாதுக்களும் உள்ளது. இவை நம் உடலில் இருக்கும் பேச்சுக்களை வெளியேற்ற உதவி செய்கின்றது. மேலும் முட்டைக்கோசில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவி செய்கின்றது.
கீரைகள்…
கீரைகளில் வைட்டமின் சத்துக்களும், இரும்புச் சத்தும் மற்றும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் அதிகளவில் உள்ளது. கீரைகள் நமது உடலில் உள்ள தேவையற்ற பேச்சுக்களை வெளியேற்ற உதவி செய்கின்றது.
காளான்…
காளான்களை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது வயிற்றில் தேங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்புகளையும் கலோரிகளையும் கரைத்து வெளியேற்ற உதவி செய்கின்றது. இதன் மூலமாக நாம் உடல் எடையை குறைத்துக் கொள்ள முடியும். குளித்தலை நாம் சூப்பாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிடலாம்.
கேரட்…
கேரட்டில் பீட்டா கரோட்டின் சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. மேலும் கேரட்டில் நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றது. இந்த சத்துகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவி செய்கின்றது.