உடல் எடையை குறைக்க வேண்டுமா!! இளநீரை இப்படி குடித்து பாருங்க!!

Photo of author

By Sakthi

உடல் எடையை குறைக்க வேண்டுமா!! இளநீரை இப்படி குடித்து பாருங்க!!

Sakthi

உடல் எடையை குறைக்க வேண்டுமா!! இளநீரை இப்படி குடித்து பாருங்க!!

உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்கள் உடல் எடையை குறைப்பதற்கு இளநீரை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்கள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால் அந்த முயற்சிகளால் உடல் எடை வேகமாக குறைந்தாலும் அதை விட இரண்டு மடங்காக அதிகரிக்கவும் செய்கின்றது.

எனவே உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் இளநீரை குடித்து வரலாம். இளநீருடன் சில பொருட்களை கலந்து குடித்து வருவதன் மூலமாக உடல் எடையை கணிசமாக குறைக்கலாம். இளநீரை குடிப்பதன் மூலமாக எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்று பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க இளநீரை பயன்படுத்தும் முறைகள்…

* இளநீரில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளது. இதனால் இளநீரை தாராளமாக குடிக்கலாம்.

* இளநீரை பகலில் எந்த நேரத்திலும் குடிக்கலாம். உடல் எடை குறையத் தொடங்கும்.

* உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்த பலனை தரும்.

* உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இளநீருடன் சிறிதளவு புதினா சேர்த்து குடிக்கலாம். இதனால் வயிறு குளிர்ச்சி அடையும்.

* இளநீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதன் மூலமாக உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் நீக்கப்படுகின்றது. உடல் எடையும் குறையத் தொடங்கும்.

* இளநீருடன் துளசி சேர்த்து குடித்து வந்தால் உடல் எடை கணிசமாக குறையத் தொடங்கும்.

* சப்ஜா விதைகளை இளநீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கணிசமாக குறையத் தொடங்கும்.