உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? இதோ இந்த தேன் பூண்டு சாப்பிடுங்க!!

Photo of author

By Sakthi

உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? இதோ இந்த தேன் பூண்டு சாப்பிடுங்க!!

உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்கள் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாக இருக்கும் தேன் பூண்டு எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

ஒரு சிலர் உடல் எடை அதிகரித்து இளம் வயதிலேயே வயதானவர்கள் போல தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்கு காரணம் அதாவது உடல் எடை அதிகரிக்க காரணம் நம்முடைய உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகம் சேர்வது தான். இதற்கு காரணம் ஒழுங்கு முறையற்ற உணவுகளை நாம் சாப்பிடுவதால் தான். தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேர்ந்து உடல் எடை அதிகரிக்கின்றது.

இந்த உடல் எடையை அதிகரித்தால் குறைப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளது. ஆனால் அதில் ஒரு சிலவற்றை மட்டும் நாம் பின்பற்றிக் கொண்டே இருக்க வேண்டும். உதாரணமாக நாம் உடற்பயிற்சி(ஜிம்) கூடங்கள் சென்று உடல் எடை குறைத்தால் அதை பின்பற்றி கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் உடல் எடை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி விடும். அவ்வாறு இல்லாமல் இந்த பதிவில் வேகமாகவும் எளிமையாகவும் இரண்டே பொருட்களை வைத்து எவ்வாறு உடல் எடையை குறைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க நாம் தேனில் ஊற வைத்த தேன் பூண்டு சாப்பிடலாம். இந்த தேன் பூண்டு நம்முடைய உடலில் தேவையில்லாமல் சேர்ந்து இருக்கும் கொழுப்புகள் கரைந்து வெளியேறிவிடும். இதனால் உடல் எடையும் வேகமாக குறையத் தொடங்கும்.

தேன் பூண்டு செய்ய தேவையான பொருட்கள்…

* தேன் – தேவையான அளவு
* பூண்டு – 20 பெரிய பூண்டு

செய்முறை…

தேன் பூண்டு தயார் செய்யும் முறை மிகவும் எளாமையான ஒன்று தான். அதற்கு முதலில் 20 பெரிய பல் கொண்ட பூண்டை எடுத்து தோல் உரித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேர்த்துக் கொள்ளை வேண்டும். பின்னர் அதில் 20 துண்டுகள் மூழ்கும் அளவுக்கு தேன் ஊற்றிக் கொள்ளை வேண்டும்.

பின்னர் இதை நன்கு இறுக்கமாக மூடிக் கொள்ள வேண்டும். இதை 24 மணி நேரம் அதாவது ஒரு நாள் முழுவதும் அப்படியே விட்டுவிட வேண்டும். மறுநாள் முதல் இதில் இருந்து ஒரு பூண்டு எடுத்து சாப்பிட்டு வந்தாலே உடல் எடை குறையத் தொடங்கும்.