உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமா! வீட்டில் உள்ள இந்த பொருட்களே போதும்!

0
246

உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமா! வீட்டில் உள்ள இந்த பொருட்களே போதும்!

உடல் பருமனை குறைக்க சமையலறையில் பயன்படுத்தக்கூடிய பொருள்களை வைத்து எவ்வாறு உடல் பருமனை குறைக்கலாம் என்பதனை இந்த பதிவின் மூலமாக காணலாம்

தற்போதுள்ள காலகட்டத்தில் நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. கடைகளில் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்கள் மற்றும் மிக விரைவாக செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக உடல் பருமன் அதிகரிக்க செய்கிறது. இதனை குறைக்கும் வழிமுறைகளை காணலாம்.

பிரியாணி இலை இந்த இலையில் உடலுக்கு தேவையான ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் விட்டமின் ஏ, சி, இ ஆகியவை உள்ளது. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை உள்ளது.

உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவை அதிகரித்து உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. பட்டை இவை நம் சாப்பிடக்கூடிய உணவுகளை மிக விரைவாக செரிமானம் செய்ய உதவுகிறது.

ஏலக்காய் இவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவை அதிகரிக்கிறது. ஏலக்காய் உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் ஒரு மூலப் பொருளாகும். சீரகம் இவை வயிற்றில் உள்ள வாயுக்களை நீக்க உதவுகிறது. மலச்சிக்கலை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது.

மேலும் அரை லிட்டர் தண்ணீரில் ஒரு பிரியாணியிலை, இரண்டு பட்டை, ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் இரண்டு ஏலக்காய் ஆகியவற்றை நன்றாக காய்ச்சி அதனை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடித்து வந்தால் உடல் பருமன் ஆனது மிக விரைவாக குறையும்.

 

Previous articleசிம்மம் ராசி- இன்றைய ராசிபலன்!  நினைத்த காரியம் நிறைவேறும் நாள்!
Next articleகன்னி ராசி-இன்றைய ராசிபலன்! குழந்தைகள் மூலம் நன்மைகள் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here