உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த இரண்டு பழங்கள் மட்டும் போதும்!

Photo of author

By Sakthi

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த இரண்டு பழங்கள் மட்டும் போதும்!

உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்கள் அனைவரும் உடல் எடையை வேகமாகவும் சுலபமாகவும் குறைக்க வெறும் இரண்டு பழங்களை வைத்து எவ்வாறு ஜூஸ் தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால் அனைவருக்கும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது. முக்கியமாக உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிப்பதால் தான் அனைவருக்கும் உடல் எடை அதிகரிக்கின்றது. இந்த கெட்ட கொழுப்புகளை கரைத்து விட்டால் உடல் எடையை எளிமையாக குறைக்கலாம்.

இதற்கு பலரும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்கிறார்கள். அதே போல பலவிதமான சிகிச்சை முறைகளை மேற்கொள்கிறார்கள். இருப்பினும் உடல் எடை மெல்ல மெல்ல குறைந்து மீண்டும் அதிகரிக்கின்றது. இந்த உடல் எடையை வெறும் இரண்டு பழங்களை வைத்து குறைக்கலாம்.

அதில் ஒன்று பூசணிப்பழம் ஆகும். பூசணிக்காய் என்பதை அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது பழுத்த பின்னர் கிடைக்கும் பழத்தை வைத்து உடல் எடையை எளிமையாக வேகமாக குறைக்க முடியும். ஆம் அது எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க தேவையான பழங்கள்…

* பூசணிப்பழம்
* ஆப்பிள்

செய்முறை…

முதலில் நன்கு பழுத்த இரண்டு பூசணிப் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தோல் மற்றும் விதைகளை நீக்கி சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய இந்த துண்டுகளை மிக்சி ஜாகிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதனுடன் சிறிது சிறிதாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்கும் ஜூஸ் தயாராகி விட்டது. இதை வடிகட்டி பின்னர் குடிக்கலாம். இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.

பூசணிப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் நம்முடைய செரிமான மண்டலம் மேம்படும். மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். அதே போல உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.