ரத்தத்தின் சர்க்கரை அளவு குறைய வேண்டுமா? இதனை பாலோ பண்ணுங்க!
ரத்த சர்க்கரையின் அளவை நான்கு நாட்களில் கட்டுப்படுத்த எளிய வழிமுறைதற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரத்த சர்க்கரை அளவு அதிகமாகிக் கொண்டே வருகிறது. தகுந்த உணவு கட்டுப்பாடு இருந்தும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடிவதில்லை. வீட்டில் இருந்தபடியே வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சர்க்கரை அளவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.
ஆறு கிராம்பு, வெந்தயம், பாதி எலுமிச்சம் பழம், கருவேப்பிலை.முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பாத்திரத்தில் பட்டை, கிராம்பு, வெந்தயம், கருவேப்பிலை இந்த நான்கையும் ஒன்றாக ஒரு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் முக்கால் டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். ஒரு நாள் கழித்து பார்த்தால் அது நன்கு ஊறி இருக்கும். ஊற வைத்து தண்ணீரை காலையில் எழுந்தவுடன் வெறு வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து விட வேண்டும்.
மீதமுள்ள தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கொதித்துக் கொண்டிருக்கும் பொழுதே அதனுடன் எலுமிச்சை பழத்தை தோலுடன் அதில் சேர்த்து விட வேண்டும். பிறகு நான்கு நாட்கள் அந்த தண்ணீரை குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வேகமாக குறைய தொடங்கும்.