மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டுமா! தாமரை இதழ் டீ வைத்து குடிங்க!!

0
38
#image_title

மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டுமா! தாமரை இதழ் டீ வைத்து குடிங்க!!

நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு பிரச்சனையை தடுக்க தாமரை இதழ் பயன்படுத்தி டீ தயார் செய்வது எவ்வாறு என்பது பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மாரடைப்பு என்பது இன்றைய காலத்தில் அனைத்து தரப்பினருக்கும் ஏற்படும் நோயாக இருக்கின்றது. இந்த மாரடைப்பு சிலருக்கு திடீரென்று ஏற்படும். ஒரு சிலருக்கு அறிகுறிகளுடன் ஏற்படும். இந்த மாரடைப்பு பிரச்சனையை சரி செய்ய பல வழிமுறைகள் இருந்தாலும் நாம் தாமரை இதழ்களை பயன்படுத்தி டீ தயார் செய்து குடித்தால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

இந்த தாமரை இதழ் டீ தயார் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் இதை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தாமரை இதழ் டீ தயார் செய்ய தேவையான பொருட்கள்…

* தாமரை இதழ்கள்
* சுக்கு
* மிளகு
* திப்பிலி
* வெல்லம்

தாமரை இதழ் டீ தயார் செய்யும் முறை…

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

தண்ணீர் கொதித்த பிறகு தாமரை இதழ்களை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

அதன் பின்னர் இதில் சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதில் சேர்ந்திருக்கும் பொருள்களில் உள்ள சத்துக்கள் தண்ணீரில் இறங்கும். அது வரை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு இறுதியாக இதில் வெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை சுவைக்காக பயன்படுத்தலாம். இறுதியாக ஒரு கொதி வந்த வந்த பிறகு இறக்கி விடலாம். மாரடைப்பை தடுக்கும் தாமரை இதழ் டீ தயாராகி விட்டது.

இதை வடிகட்டி குடிக்கலாம். தினமும் இரவு இதை ஒரு டம்ளர் தயார் செய்து குடித்து வந்தால் மாரடைப்பு பிரச்சனை தடுக்கலாம்.