தீராத நோயாக இருக்கும் தலைவலி பிரச்சனை! இதை குணப்படுத்த இரண்டு கை வைத்தியம் இதோ!!

0
28
#image_title

தீராத நோயாக இருக்கும் தலைவலி பிரச்சனை! இதை குணப்படுத்த இரண்டு கை வைத்தியம் இதோ!!

நமக்கு இருக்கும் தீராத நோயாக இருக்கும் தலைவலி பிரச்சனையை குணப்படுத்த இரண்டு எளிமையான மற்றும் உடனடி நிவாரணம் தரக்கூடிய இரண்டு வைத்திய முறைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நம்மில் ஒரு சிலருக்கு தலைவலி என்பது தீராத நோயாக இருக்கும். இந்த தலைவலி நமக்கு பல வேதனைகளை கொடுக்கக் கூடும். தலைவலிகளில் ஒற்றைத் தலைவலி என்பது மிகவும் வேதனையை அளிக்கும்.

தலைவலி வந்துவிட்டால் நாம் உடனே மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவோம். உடனே குணமாகும். ஆனால் மீண்டும் தலைவலி நமக்கு ஏற்படும். எனவே தலைவலி பிரச்சனையை குணப்படுத்த நாம் இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்த வேண்டும். அதில் இரண்டு வகையான மருத்துவ முறைகளை பற்றி பார்க்கலாம்.

தலைவலி பிரச்சனையை குணப்படுத்த உதவும் முதல் வழிமுறை..

நமக்கு தலையில் வலி ஏற்படும் பொழுது ஐந்து முதல் ஆறு துளசி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு லவங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய துண்டு சுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக சுக்கு, துளசி இலைகள், லவங்கம் மூன்றையும் ஒன்றாக வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த கலவையை நம் நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.

தலைவலியை குணப்படுத்தும் இரண்டாவது வழிமுறை…

தலைவலியை குணப்படுத்த நாம் மல்லிகா தழைகளை பயன்படுத்தலாம். அதாவது கொத்துமல்லித் தழைகளை எடுத்து மிக்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதை காலை நேரத்தில் குடிக்க வேண்டும். இந்த கொத்துமல்லித் தழை ஜூஸை தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்து வரும் பொழுது தலைவலி பிரச்சனை என்பது இருக்காது.