முடி உதிர்வு பாதிப்பு நின்று அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

0
126
#image_title

முடி உதிர்வு பாதிப்பு நின்று அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

இன்றைய காலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரையும் பாதிக்கக் கூடிய பிரச்சனையாக இருப்பது தலை முடி உதிர்தல். இதற்கு முக்கிய காரணம் பொடுகு. இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு, தலையில் அரிப்பு, வழுக்கை, தோல் வியாதிகள் உள்ளிட்டவை நிகழ தொடங்கும். முடி அதிகளவில் உதிர காரணமாக இருக்கும் பொடுகு பிரச்சனையானது வறண்ட சருமம், மன அழுத்தம், முறையற்ற உணவு பழக்கம் போன்றவைகளால் ஏற்படுகிறது.

தேவையான பொருட்கள்:-

*ஆலிவ் ஆயில் – 1 தேக்கரண்டி

*பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

*கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி

*தூயத் தேன் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

பெரிய வெங்காயம் ஒன்றை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். பின்னர் அதை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். இந்த வெங்காய சாற்றை ஒரு பவுலில் வடிகட்டி கொள்ளவும்.

அதன் பிறகு அதில் ஆலிவ் ஆயில் மற்றும் சுத்தமான தேன் கலந்து நன்கு கலக்கவும். பின்னர் கற்றாழை ஜெல் 1 தேக்கரண்டி எடுத்து அதில் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இந்த கலவையை குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைத்து 1 முதல் 2 வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.

தயார் செய்து வைத்துள்ள இந்த ரெமிடியை முடிகளின் வேர்காள் பகுதியில் படுமாறு தடவவும். அரை மணி நேரத்திற்கு பிறகு ஷாம்பு பயன்படுத்தி முடியை நன்கு அலசவும்.

இந்த ரெமிடியை வாரத்திற்கு 2 முறை தலைக்கு உபயோகித்து வந்தோம் என்றால் முடி உதிர்தல் பாதிப்பு நீங்கி முடி அடர்த்தியாக வளரும்.

Previous articleஉங்கள் முகம் பொலிவாக இருக்க வேண்டுமா? அப்போ கடலை மாவை இப்படி பயன்படுத்துங்கள்!!
Next articleகேரளா ஸ்டைல் வெஜ் சொதி!! அட அட என்ன ஒரு சுவை!!