மஞ்சள் நிறப்பற்கள் வெண்மையாக மாற வேண்டுமா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!!
பற்கள் மஞ்சள் கறைகள் இல்லாமல் இருப்பது உங்களுடைய வாய் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி. அதுமட்டுல்ல, அது உங்களுடைய முகத்துக்கு அழகையும் கூட்டக்கூடியது.
வயதாக வயதாக பற்களில் வெண்மை நிறம் மாறி மஞ்சள் நிறம் படிய ஆரம்பிக்கும் தன்மை உண்டு. ஆனால் அதுதவிர பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதற்குப் பபல காரணங்கள் உண்டு.
காரணங்கள்:
பற்கள் வெண்மையாக இல்லாமல் மஞ்சள் கறை படிந்து காணப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவையாவன,
1: மரபணுக்கள்,
2: காபி, டீ அருந்தும் பழக்கம்
3: முறையான பற்கள் சுகாதாரமின்மை
4: புகைப்பிடித்தல்
5: கார்பனேட்டட் பானங்கள்
இதனை போக்குவதற்கு வீடியோ செய்யக்கூடிய வைத்தியம்.
தேவையான பொருட்கள்
உப்பு
பொதினா இலை
பூண்டு
பேஸ்ட்
செய்முறை
முதலில் ஒரு பல் பூண்டை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். இவற்றுடன் இரண்டு அல்லது மூன்று பொதினா இலைகளை சுத்தமாக கழுவிக்கொண்டு இவற்றுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் உப்பு மற்றும் எடுத்து வைத்திருந்த பூண்டு இவை இரண்டையும் மிக்ஸ் செய்து கொள்ளவும்.
அதன் பிறகு நீங்கள் தினமும் உபயோகப்படுத்தும் பேஸ்டை அவற்றுடன் கலந்து உங்கள் பற்களை நன்றாக தேய்த்து சுத்தம் செய்தால் போதும் மஞ்சள் நிறமாக இருந்த உங்கள் பற்கள் வெண்மை நிறமாக மாறும்.