வெள்ளை முடி நிமிடத்தில் கருமையாக மாற வேண்டுமா? அப்போ இந்த மூலிகை எண்ணையை ட்ரை பண்ணுங்க..!!

0
197
#image_title

வெள்ளை முடி நிமிடத்தில் கருமையாக மாற வேண்டுமா? அப்போ இந்த மூலிகை எண்ணையை ட்ரை பண்ணுங்க..!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலனோர் வெள்ளை நரை பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவரும் இந்த பாதிப்பால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நரை முடியை கருமையாக்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஹேர் ஆயில் தயார் செய்து பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் சில தினங்களில் நரை முடி கருமையாக மாறிவிடும்.

தேவையான பொருள்கள்:-

*கறிவேப்பிலை

*மருதாணி

*கரிசலாங்கன்னி

*நெல்லிக்காய்

*செம்பருத்தி இலை

*வெந்தயம்

*கருஞ்சீரகம்

*ஆவாரம் பூ

*தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் தேங்காய் எண்ணையை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் இரும்பு கடாய் வைத்து 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் வெயிலில் உலர்த்திய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு காய்ச்சி கொள்ளவும். எண்ணெய் நிறம் மாறி வந்த உடன் அடுப்பை அணைத்து விடவும். காய்ச்சிய எண்ணையை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளவும்.

இந்த ஹெர்பல் ஆயிலை தேவையான அளவு எடுத்து தலை முழுவதும் அப்ளை செய்து மஜாஜ் செய்யவும். இவ்வாறு தினமும் செய்து வர நரை முடி அனைத்தும் கருமையாக மாறிவிடும்.