உங்கள் உடல்.. ஓவர் நைட்டில் வெள்ளையாக வேண்டுமா? அப்போ இந்த க்ரீமை பயன்படுத்துங்கள்!

Photo of author

By Divya

உங்கள் உடல்.. ஓவர் நைட்டில் வெள்ளையாக வேண்டுமா? அப்போ இந்த க்ரீமை பயன்படுத்துங்கள்!

Divya

உங்கள் உடல்.. ஓவர் நைட்டில் வெள்ளையாக வேண்டுமா? அப்போ இந்த க்ரீமை பயன்படுத்துங்கள்!

முகம் வெள்ளையாக கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும். இயற்கை முறையில் முகத்தை வெள்ளையாக்க பல எளிய வழிகள் இருக்கின்றது.

இயற்கை பொருட்கள் மூலம் முகத்தை வெள்ளையாக்குவது குறித்து தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்:-

1)சந்தனம்
2)பன்னீர்
3)கடலை மாவு
4)பால்
5)கற்றாழை ஜெல்
6)பாதாம்
7)கேரட்
8)கஸ்தூரி மஞ்சள் தூள்

செய்முறை…

ஒரு கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் இந்த கேரட்டை போட்டு பொடியாக்கி கொள்ளவும். அடுத்து 2 தேக்கரண்டி சந்தனப் பொடி, 2 தேக்கரண்டி கடலை மாவு எடுத்துக் கொள்ளவும்.

10 பாதாம் பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.

கற்றாழை மடலின் தோலை நீக்கி அதன் ஜெல்லை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் அரைத்த கேரட் பொடி, கற்றாழை ஜெல், சந்தனப் பொடி, கடலை மாவு, அரைத்த பாதாம் பொடி சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பிறகு அதில் சிறிது பால் மற்றும் பன்னீர்(ரோஸ் வாட்டர்) சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக 1/4 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

ஒரு க்ரீம் பதத்திற்கு இதை கொண்டு வரவும். இதை ஒரு பாட்டிலில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

இந்த க்ரீமை தினமும் முகத்திற்கு தடவி வந்தால் முகத்தில் உள்ள அழுக்கு, கொப்பளம், கரும் புள்ளிகள் நீங்கி முகம் அதிக பொலிவு பெறும்.