உங்கள் முகம் பொலிவாக இருக்க வேண்டுமா? அப்போ கடலை மாவை இப்படி பயன்படுத்துங்கள்!!

0
123
#image_title

உங்கள் முகம் பொலிவாக இருக்க வேண்டுமா? அப்போ கடலை மாவை இப்படி பயன்படுத்துங்கள்!!

முகம் கருமையாக இருந்தாலும் அவை பொலிவாக இருந்தால் முகம் அழகாக இருக்கும். இந்த முக பொலிவை பெற இயற்கையான பொருட்களை முகத்திற்கு பயன்படுத்தி வந்தோம் என்றால் உடனடி தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கடலைமாவு – 1 1/2 தேக்கரண்டி

*காபித்தூள் – 1 தேக்கரண்டி

*மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி

*பால் – 2 தேக்கரண்டி

*தூயத் தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்துக் கொள்ளவும். அதில் 1 1/2 தேக்கரண்டி கடலைமாவு, 1 தேக்கரண்டி காபித் தூள் மற்றும் 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் அதில் 2 பால் சேர்த்துக் நன்கு கலக்கி விடவும். அடுத்து 1 தேக்கரண்டி அளவு தூயத் தேன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இந்த கலவையை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன் முகத்தை நல்ல தண்ணீர் கொண்டு கழுவிக் கொள்ளவும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். இதை 15 நிமிடங்கள் வரை முகத்தில் இருக்கும்படி விட்டு பின்னர் நல்ல தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும்.

இதனை தொடர்ந்து செய்து வருவதின் மூலம் உங்களின் முகத்தில் உள்ள கருமை நீங்கி நீங்கள் நன்கு பொலிவுடன் காணப்படும்.

Previous articleவாயில் வைத்ததும் கரையும் கேரள உண்ணியப்பம் – எவ்வாறு செய்வது?
Next articleமுடி உதிர்வு பாதிப்பு நின்று அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!