இந்த தீபாவளிக்கு உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்!!

0
110
#image_title

இந்த தீபாவளிக்கு உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்!!

பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள அதிகம் விரும்புகிறார்கள். இதற்காக முகத்தை பொலிவாக மாற்ற இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். காரணம் விரைவில் தீர்வு கிடைக்கும் என்பதினால் தான். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியாமல் பலர் இருக்கின்றனர்.

ஆபத்தை ஏற்படுத்தும் செயற்கை பொருட்களை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை பராமரித்து வந்தால் முகம் அழகாகவும், பொலிவாகவும் இருக்கும். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது

தேவையான பொருட்கள்:-

*கடலை மாவு – 2 தேக்கரண்டி

*புளிப்பு இல்லாத தயிர் – 1 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்துக் கொள்ளவும். அதில் 2 தேக்கரண்டி கடலை மாவு சேர்க்கவும். அடுத்து புளிப்பு இல்லாத தயிர் 1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ் பேக்கை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்னர் முகத்தை நன்கு கழுவிக் கொள்ளவும். ஒரு காட்டன் துணி கொண்டு முகத்தை நன்கு துடைத்துக் கொள்ளவும். அடுத்து தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை முகத்தில் போட்டு நன்கு மஜாஜ் செய்யவும். இந்த பேஸ் பேக்கை 1/2 மணி நேரம் வரை முகத்தில் வைத்திருந்து பின்னர் சுத்தம் செய்து கொள்ளவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்தோம் என்றால் 7 நாளில் முகம் அழகாகவும், பொலிவாகவும் மாறிவிடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*கடலை மாவு – 2 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*பால் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பவுலில் 2 தேக்கரண்டி கடலை மாவு சேர்க்கவும். அடுத்து 1 தேக்கரண்டி முகத்திற்கு பயன்படுத்தும் கஸ்தூரி மஞ்சளை சேர்த்து கலந்து விடவும்.

அடுத்து 2 தேக்கரண்டி காய்ச்சாத பால் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இந்த பேஸ் பேக்கை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்னர் முகத்தை நன்கு கழுவிக் கொள்ளவும். ஒரு காட்டன் துணி கொண்டு முகத்தை நன்கு துடைத்துக் கொள்ளவும். அடுத்து தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை முகத்தில் போட்டு நன்கு மஜாஜ் செய்யவும். இந்த பேஸ் பேக்கை 1/2 மணி நேரம் வரை முகத்தில் வைத்திருந்து பின்னர் சுத்தம் செய்து கொள்ளவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்தோம் என்றால் 7 நாளில் முகம் அழகாகவும், பொலிவாகவும் மாறிவிடும்.

Previous articleதலைமுடி பிரச்சனைகளை குணப்படுத்தும் செம்பருத்தி பூ எண்ணெய்! இதை எவ்வாறு தயார் செய்வது!!
Next articleஉங்களுக்கு அதிகமாக வியர்க்கின்றதா! இந்த இரண்டு வழிகளை பயன்படுத்துங்கள்!!