பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் இன்று கட்டாயமாக கனமழை!! 

0
134

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் இன்று கட்டாயமாக கனமழை!! 

இன்று சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் வட மாநிலங்களான கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்த பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே ஓரளவு மழை பெய்யும். ஆனால் மற்ற பகுதிகளில் காற்றின் திசைவேக மாறுபாடு, வெப்ப சலனம் ஆகியவற்றின் காரணமாக ஓரளவு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதைப்போலவே தற்போது வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வருகிறது. இதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாக நல்ல மழையானது பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று புதன்கிழமையும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் இன்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் நாளை 27-07-2023 வியாழக்கிழமை முதல் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பொறுத்தவரை நேற்று கரு மேகங்கள் சூழ்ந்தவாறு லேசான சாரல் மழையும், அவ்வப்போது மிதமான மழையும் பெய்துள்ளது. அதேபோல் இன்றும் தொடரகூடும்.

நேற்று காலை 8.30 மணி அளவில் முடிந்த 24 மணி நேர நிலவரப்படி அவலாஞ்சியில் அதிகபட்சமாக 38 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதேபோல் மற்ற பகுதிகளில்

மழை விவரம் வருமாறு,

* சின்ன கல்லாறு – 12 செமீ

* மேல் பவானி – 12 செமீ

* வொர்த் எஸ்டேட், வால்பாறை, தேவாலா – தலா 9 செமீ,

* சின்கோனா – 8 செமீ,

* சோலையார், பந்தலூர் தாலுகா அலுவலகம், பார்வூட் – 7 செமீ,

போன்ற இடங்களில் மழை பெய்துள்ளது.

 

 

 

 

 

Previous articleஇன்ஜினியரிங் முடித்தவரா நீங்கள்!! TCS நிறுவனத்தில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்பு!!
Next articleஇன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! கடும் அதிருப்தியில் மக்கள்!!